பக்கம்:சுமைதாங்கி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தறியருகே அமர்ந்திருகால் தாளம் போட த் தவருமல் இருகையால் ஊடும் பாவும் குறியுடனே இணைத்திறுக்கி ஆடை யாக்கிக்

குறிப்பிட்ட அளவாகத் துணித்த தாலே அறிவுடையார் துணியிென்றே அழைக்க; மேலும்

அமைவாக வெட்டிடலால் வேட்டி என்றும், நறியமனச் சேலைதனைக் கூறை யென்றும்

நாடுமுற்றும் போற்றுதலை நாமும் கண்டோம்.

ஆலையுடன் போட்டியிடத் தறியால் ஆமோ?

அற்றைநாள் தொழிலெனினும் விஞ்ஞா னத்துச் சோலையதன் நறுமணத்தை நுகரோம் என்று

சொல்வதிலே கியாயமில்லை! எனினும் இன்று வேலையின்றித் தறிபட்ட பாடு பட்டு,

விடியாத இருளாக வாழ்வி ழந்து காலைஎன்று வருமென்று காத்தி ருக்கும்

கதியற்ற நெசவாளர் நிலைமை என்ன?

தள்ளுபடி அதிகமாகத் தந்தும், தாமே

தக்கஉதா ரணமாகத் திகழ்ந்தும், அன்று அள்ளுசுவைத் தமிழரசை அமைத்த மேலோர்

அன்பாலே நெசவாளர் முன்னேற் றத்தைக் கொள்ளுவதே குறிக்கோளாய்த் திட்டம் தீட்டிக்

குறைகளேந்தார் நம்மவரின் கொள்கையாகக் கள்ளமிலாக் கைத்தறியின் ஆடை என்றும்

கையாள்வோம்; நெசவாளர் ஏழ்மை கொல்வோம்.

84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/93&oldid=692170" இலிருந்து மீள்விக்கப்பட்டது