பக்கம்:செவ்வானம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 103 கண்சிமிட்டுவதும் உண்டு. எரிக்கும் வெயிலெனக் கொடுஞ்சிந்தனை குமுறுவதுமுண்டு முன்னறிவிப்பின்றி - முன்அறிக்கைகள் எதற்கும் கட்டுப்படாமல் திடீர் திடீரென வானிலை மாற்றங்கள் நிகழ்வது போலவே, அவன் உள்ளத்திலும் மாறுதல்கள் ஏற்படும். அவன் எப்பொழுது மகிழ்வுடன் இருப்பான், எந்நேரத்தில் சீறிவிழுவான், எவ்வேளையிலே பிறரிடம் அன்பாகப் பேச விரும்பாது சிடுசிடுப்பான் என்றெல்லாம் முன்னதாகவே கூறிவிட முடியாது. சிலரிடம் வெறுப்புக்காட்டும் அவன் உள்ளத்தில் சிலர் மீது அதிக அன்பு பிறக்கும். பலரிடம் இரக்கம் இல்லாதவன்போல் நடந்து கொள்ளத் துடிக்கும் அவனுக்கு சிலரிடம் அளவிலா அனுதாபம் ஏற்படும், சிலர் மீது அதிக ஆத்திரம் உண்டாகும். முரண்பாடுகளின் தொகுப்பு அவன் என்பதை அவனுடன் பழகுகிறவர்கள் உணர்ந்து விட முடியும். அவன் உள்ளம் அன்று குமைந்து கொதிப்பேறியிருந்தது. காரணமில்லாத வேதனை இதயத்தில் அரித்துக் கொண்டிருந்தது. அந்திச் செவ்வாணம் அவனுக்கு வழக்கம்போல் அழகுக் காட்சியாக மிளிர்ந்து அமைதியும் ஆனந்தமும் தரவில்லை. ஆனால் தன் உள்ளக் கொதிப்பின் பிரதிபலிப்பாகவே கண்டான் அதை. உலக மக்களில் வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பெற்றுள்ளோரின் கொதிக்கும் இதயச் சித்திரம் அது குமைந்து குமுறுவோரின் தீக்கண் விழிப்பு அது உழைத்து உழைத்து மெலிந்து சாவோரின் இதய ரத்தம் அது என்றேனும் ஒருநாள் விழித்தெழுந்து வெறியாட்ட வீணர்களுக்குச் சாவோலை தீட்டத் தயாராகும் மக்கள் காட்ட விரும்புகிற அபாய அறிவிப்பு அது இவ்விதம் அடுக்கிக் கொண்டிருந்தது அவன் மனம். - - அவனுக்கு வாழ்க்கையில், பலரது வாழ்வைப் பாழாக்கித் தாம் வாழ வழிவகுத்துக்கொள்கிற சிலர்போக்கில், சரியாக வாழ இன்னும் கற்றுக்கொள்ளாத மனிதரிடத்தில் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. வெறுப்பு குமுறலையும் கொதிப்பையும் வளர்த்தது. சென்ற சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/105&oldid=841305" இலிருந்து மீள்விக்கப்பட்டது