பக்கம்:செவ்வானம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1 of செல்வாக்கை வளர்த்து பிறர் கண்களையும் அறிவையும் மழுங்கவைக்கவும் முடிகிறது. தன்னைப் போன்றவர்களோ உயர்ந்த நோக்கங்களை, லட்சியத் திட்டங்களைப் பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. உண்மையாக உழைத்தாலும் உரிய பலன் கிடைப்பதில்லை. திறமைசாலிகள் உரிய போற்றுதலைப் பெறமுடியாத சமயத்திலே, தகுந்த கவனிப்பைப் பெறுகிற அளவுக்கு மக்களைத் திருப்புவதற்கு ஆவனவற்றைச் செய்ய அவசியமான தேவை களைக்கூட அடையமுடியாதபோது, எல்லா வசதிகளும் உடைய வர்கள் பிறர் கவனத்தை சுலபமாகக் கவர்ந்துவிட முடிகிறது. எளிதில் பலரது கரகோஷங்களையும், தலையாட்டுதல்கள், பஜனை பாடல்களையும் பெற்றுவிடுகிறார்கள். இப்படிப் பலரும் கெளரவிக்கத் தொடங்கி அவர்களைச் சுற்றிக் கும்பல் கூடவும் அவர்கள் உண்மையிலே தாங்கள் மகாமேதைகள், எல்லாம் தெரிந்தவர்கள் என்று நம்பி விடுகிறார்கள். மற்றவர்களுக்குப் போதிக்கவேறு வந்து விடுகின்றனர். இந்த எண்ணம் தாமோதரனின் உள்ளத்தீயைப் பொங்கி எழச் செய்தது. தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒருசிறு புத்தகம் எழுதியே தீர்ப்பது என்று துணிந்து வீட்டிற்குக் கிளம்பினான் அவன் கொதிப்பின் விளைவாகக் கிளம்பும் கட்டிகள்போல, வானப் பரப்பில் நட்சத்திரங்கள் தெறித்தன. செவ்வானம் இருள்வானாகிப் பின் ஒளிப் பூங்காவாக மாறும் விந்தையை ரசிக்கும் பண்பு அவனுக்கிருந்தது. ஆனால் இப்பொழுது அவன் வானத்து வனப்புகளை ரசிக்கும் தன்மையில் இல்லை. அவன் வீடு திரும்பும்பொழுது எதிரே காரில் ஜம்பமாகச் சென்று கொண்டிருந்த சிவசைலம், சாவித்திரி, சியாமளா ஆகியோர் அவன் பார்வையில் பட்டனர். இவர்கள் வாழ முடிகிறது. தங்கள் மானத்தை, சுதந்திரத்தை உடலையும்கூட பிறருக்குஅடிமையாக்கி விடுகிறவர்கள் வெளியுலகில் பிரமாத வெளிச்சமிட்டுத் திரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/109&oldid=841313" இலிருந்து மீள்விக்கப்பட்டது