பக்கம்:செவ்வானம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 செவ்வாணம் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொன்னான் அவன். ஆனால் அவள் அதிகக் கண்டிப்பாய்க் கூறினாள். அதெல்லாம் முடியாது. நான் கொண்டுவருகிறவற்றை நீங்கள் கட்டாயம் சாப்பிட்டேதீரனும் என்று. பின்சிறுபிள்ளைபோல் கலகலவென்று நகைத்தாள். . அந்த நேரத்திலே சரியான விளையாட்டுப்பிள்ளை இவள் என்றே தோன்றியது அவனுக்கு அவள் பள்ளிக்கூடத்துப் பிள்ளை களிடம் அதிகாரம் செய்வதுபோல் விரலசைத்துத் தலையை ஆட்டிக்கொண்டு பேசியது கண்டு ரசிக்கத் தகுந்த வேடிக்கைக் காட்சியாகயிருந்தது. 'நான் திரும்பவும் வருவேன். அதற்குள் கதவைத் தாழிட்டுக் கொண்டு மூச்சுக் காட்டாமல் உள்ளே பதுங்கி விடக்கூடாது. என்ன, தெரியுமா? என்றாள். 'சரிதான் டீச்சர்' என்றான் அவன் குறும்புச் சிரிப்புடன், முழுநகை முகத்திலே புரள, விழிகளில் தனி ஒளி திகழ அவனைப் பார்த்துவிட்டு வெளியேறினாள் குமுதம். 22 சொல்லியபடியே செயல்புரிந்தாள் குமுதம், அன்று மட்டுமல்ல, பல தினங்கள்வரை தாமோதரனுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டுவந்து கொடுத்தாள். கஞ்சியும், கஷாயமும் செய்து உதவினாள். அவள் அன்பும் உபசரிப்பும் அவன் இதயத்தைத் தொட்டன. அவளது சிரித்த முகமும் இனிய பேச்சும் அவன் உள்ளத்தில் குளுமை புகுத்தின. குமுதம் ரொம்ப நல்லவள் என்ற எண்ணமே நிலைத்தது அவன் உள்ளத்தில். குமுதம் மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள் செய்தாள். அவன் வேண்டாம்! போதுமே இதெல்லாம் எதற்கு? என்று எவ்வளவு கேட்டுக் கொண்டாலும் அவள் நிறுத்தவில்லை. சேவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/120&oldid=841329" இலிருந்து மீள்விக்கப்பட்டது