பக்கம்:செவ்வானம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 செவ்வானம் தாமோதரன் அவள் நினைவால் பித்துற்றுத் திரிவதிலேயே காலம் கழித்தான் என்று சொல்வதற்கில்லை. வியாதி வருவதற்கு முன் அவனுக்கு உள்ளக்கொதிப்பு ஏற்படுத்திய எண்ணங்களை அவன் மறந்துவிடவில்லை. அவனது தீர்மானத்தையும் கைவிட்டுவிட வில்லை. நினைத்ததுபோலவே எழுதிச் சிறு புத்தகம் ஒன்று வெளியிட்டான். எண்ணத் தீப்பொறிகள் நிறைந்த நூல் அது. 'வாழ்விலே வளமில்லை. மக்களின் வயிறு நிரம்ப வழி யில்லை. உழைத்து உழைத்து மெலிவோர்மேலும் மேலும் உழைத்துச் சாக வேண்டிய நிலைதான் வளர்கிறது. உண்ண உணவு, உடுக்க ஆடைகள், தங்குவதற்குச் சிறிய இடம், போதிய ஒய்வு - அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் இவை. இவற்றைக்கூடப் பெற முடியவில்லை சமுதாயத்திலுள்ள பெரும்பாலரினால். இவர்களை வஞ்சித்து, இவர்கள் உழைப்பை, உழைப்பின் பயனை அனுபவித்து டம்பவாழ்வு வாழத் துணிகிற வர்கள் இவர்களுக்குக் கிடைக்கும் கொஞ்சக் காசையும் பறிப்பதற்கு வசதிசெய்து விடுகிறார்கள். பணம் பறிக்கும் பகட்டான பாச வலைகளுக்குக் கலை என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். ஊரிலே பட்டினி. மக்களிடையே மேனியை முழுதும் மூடத் துணியில்லா நிலை. வீடுகளிலே இருட்டு. விளக்கேற்ற முடியாத நிலைமை. ஆனால் கலையின் பெயரால் காசு பறிக்கத் திட்டமிட்டு, மக்களின் பணத்தைப் பிடுங்குவதுடன் அவர்கள் காலத்தையும் கரியாக்கி, அவர்களையும் சோம்பேறிகளாக மாற்றிவிடுகிற வீணர்களின் போக்கை, அவர்கள் வாழ்க்கை முறைகளைக் கவனியுங்கள். மின்சார சக்தியை மிச்சப்படுத்துங்கள், மின்சார சக்தியை ஊதாரித்தனமாகக் கரியாக்காதீர்கள் என்று அச்சிட்டு உபதேசிக்கிற காலத்திலேயே, பிரமாத வெளிச்சம் போட்டு அச்சக்தியைத் தேவையற்ற முறைகளில் பாழடிக்கிறார்கள் நாடக, சினிமா, கலை விழாக்காரர்கள். ஆடையில்லை, துணிப்பஞ்சம் என்று நாட்டிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/126&oldid=841335" இலிருந்து மீள்விக்கப்பட்டது