பக்கம்:செவ்வானம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 செவ்வாணம் ஆடை ஆபரணங்கள், பாலிஷ் பளபளக்கும் புதுமாடல் கார்கள், போலியான அந்தஸ்து பெயர் விளம்பரங்கள். பத்திரிகைகளில் படங்கள், செய்திகள் ஏராளமாகக் கிடைக்க வழி பிறக்கிறது. ஒய்யாரிகளுக்கு ஜோடியாக டம்பாச்சரிகளும், ஜம்பம் ஜான் களுக்குத்துணையாகமேனாமினுக்கிகளும் கூடிக்களிக்க வசதிகளும் கிடைக்கின்றன. ஆகவே தாங்களே உயர்ந்தவர்கள், தாங்களே உத்தமர்கள். தாங்களே வழிகாட்டிகள் என்று நம்பி வாழவும் அவர்களுக்கு வசதிகள் உள்ளன. இவர்களுக்கு பஜனைபாடும் குலாம் கோஷ்டிகள் கூடுவதிலும் குறைவில்லை. இவர்கள் எல்லோரும் வீணர்கள் இவர்கள் செயல்கள் அத்தனையும் சுயநலச் சுரண்டல் கொள்கைகளேயாகும் என்று நான் சொல்கிறேன். உழைப்பவர்கள் எண்ணற்றோர் ஒண்டக் குடிசையின்றி. உறங்குவதற்கு ஒட்டுத்திண்ணைகூடக் கிடைக்காமல், மரத்தடியிலே, ரோட்டோரத்திலே, பிளாட்பாரங்களிலே, கட்டாந்தரைகளிலே காலம் கழிக்க வேண்டிய நிலை நீடிக்கிற இந்த நாட்டிலே, கலை ஆலயங்கள் காலியாகக் கிடக்கின்றன. உல்லாச பவனங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சினிமாத்தியேட்டர்கள் பெரிது பெரிதாக நிற்கின்றன, பூட்டுகள் கட்டுக்காவல்களுடன் இரவிலே ஒரு சிலருக்குப் பணம் ஊறும் சுரங்கமாகத் திகழ்கின்றன என்கிற காரணத்தினால் பகலெல்லாம் பாழ்மனைகளாக இருளடைந்து கிடக்கின்றன. இவை. நாட்டிலே உள்ளவை போதாதாம். மேலும் மேலும் புதிது புதிதாக பெரிது பெரிதாகக் கட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள் வசிக்க டமின்றித் தவிப்போர் வாழ்வதற்கு ஏற்றபடி தங்குமிடங்கள் கட்ட முன்வருவோரைக் காணோம். முதலாளி புன்னைவனம் கந்தர்வகலாமண்டபம் கட்டிவிட்டார். திடீரென்று அவருக்குக் கலைக்காதல் ஏற்பட்டு விட்டதாம். காதலோ காமமோ ஏற்பட்டிருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது கலைமீதுதானா அல்லது கலையின் பெயரால் தங்களையே விலை கூறி வாழ்கிற சிங்காரிகள்மீதா என்பது ஒதுக்கிவிட முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/128&oldid=841337" இலிருந்து மீள்விக்கப்பட்டது