பக்கம்:செவ்வானம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 செவ்வாணம 'ம். போகுது. இப்பவும் பிரமாதமாக ஒண்ணும் குடி முழுகிப் போகலே அவனுக்கு எழுதத்தெரியும் என்பதனாலே வறட்டுக் கூச்சல் போட்டுக்கிறுக்கிவிட்டானாக்கும். போறான்.இதனாலே எந்த அற்புதக் கோட்டையைப் பிடித்து விட்டானாம் மடையன். அவனுக்குச் சாப்பாட்டிற்குக் கூட வக்கு இல்லாமப்போனால், நம்ம கிட்ட வந்து கேட்பதுதானே. காஞ்ச பயல் மாதிரி தெருவிலே திரியாதபடி ஏதோ சாப்பாட்டிற்கு அவ்வப்போது ஸ்ம்திங் தாராளமாகவே கிடைக்கும்படி ஏற்பாடு செய்யலாமே. முதலாளி ஐயாவைக் குழையவச்சுக் குளிப்பாட்டி லாபம் பெறத் தெரியாமல் வீணாகக் குலைத்துக் கொண்டு கிடக்கானே! என்று கூட அனுதாபப்பட்டார், தாமோதரனுக்காக 'இனி முடியாது. ரொம்ப மிஞ்சிப்போய்விட்டது காரியம். அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டியதுதான். அதுக்கு என்ன செய்யலாம்? என்ற யோசனை அவர் மனதில் நிறைந்திருந்தது. அதே கேள்வியைத் தான் முதலாளியும் அவரிடம் கேட்டார். "அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கறேன் என்று இழுத்தார் சிவசைலம், இழுத்துப் பிரயோசனமில்லை. ஆள்களைவிட்டு அவன் கையைக் காலை முறிக்கச் சொல்ல வேண்டியதுதான். அப்போதான் அவனுக்குப் புத்தி வரும் என்றார் புன்னைவனம். சுலபமாகச் செய்துபோடலாம். அதனாலெல்லாம் அவன் ஒடுங்கி விடுவானா என்பது சந்தேகம் தான். அவன் மறுபடி தலை தூக்காதபடி, கழுதைமாதிரிக் கத்தினாலும் அவன் பேச்சு எடுபடாதபடி, மற்றவங்க காரித்துப்பிச் சிரித்துவிட்டுப் போகும்படி, அவ்வளவு தூரத்துக்கு அவனைச் சீரழிய வைக்கணும். அந்த யோசனைதான் எனக்கு. அதுக்குத்தான் பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/130&oldid=841340" இலிருந்து மீள்விக்கப்பட்டது