பக்கம்:செவ்வானம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 36 செவ்வானம் பறக்கவிட்டுக் கொண்டிருந்தது. இவர் ஏன் இவ்வளவு அக்கறையாக விசாரித்து அனுதாபப்படுவதுபோல் பேசவேண்டும்? திடீரென்று என்பேரில் இவருக்கு இவ்வளவு சிரத்தைப் பிறந்திருப்பது ஏனோ? எல்லாருக்கும் நல்ல பணி புரிவது தவிர வேறறியாப் பராபரம் மாதிரித்தான் பேசுகிறார். இவரைப் பற்றி ஊரிலே பேசப்படுவது தெரியாதாக்கும் என்னைப் பற்றிப் பேசுகிறார்களாம். இவருக்கு அது சகிக்கவில்லையாம் என்ன பரந்த மனோபாவம்டியம்மா இந்தப் புண்ணிய மூர்த்திக்கு இதுவரை பார்த்துப் பேசியறியாத எனக்கு உபதேசிக்க வந்துவிட்ட உத்தமர், வாழ்வதற்கு என்ன வழிகாட்டப் போகிறாரோ தெரியவில்லையே! அவளது என்ன ஓட்டத்திற்குத் தடையிட்டது அவர் கேள்வி. ‘என்ன குமுதம், என்ன யோசிக்கிறே? நீ திரும்பவும் வாத்தியாரம்மாளாக...' 'ஊகுங் என்று எதிர்மறையாகத் தலையசைத்தாள் அவள் ஏன், ஏனப்படி? என்ற அவர் கேள்விக்கு எனக்கு அது பிடிக்கவில்லை. எங்கேயும் வேலை பார்க்க பிடிக்கலே என்றாள் போகிறது. உனக்குக் கலை ஆர்வமும் சங்கீதப் பயிற்சியும் உண்டு என்று கேள்விப்பட்டேன். ஸ்கூல் டிராமக்காளை வெற்றிகரமாக நடத்துவதில் நீ பெரும் பங்கு எடுப்பதுண்டு என்று கூடச் சொன்னார்கள். அப்போ நீ ஏன் கந்தர்வ கலைக்கழகத்தில் நடிகையாகச் சேரக்கூடாது? முதலாளி புன்னைவனம் அவர்களிடம் சொல்லி உனக்கு விசேஷ சலுகைகள். அவருக்குப் பேச ஒடவில்லை. அவள் பார்வை தாமோதரன் எழுதிய புத்தகத்திலே பதிந்து உதடுகளில் கேலிச்சிரிப்பு திகழ்வதைக் கண்டவுடன். ஆகவே அவர் பேச்சை மாற்றினார். 'குமுதம், நான் நல்லதுக்குத்தான் சொல்கிறேன். நீ அடிக்கடி தாமோதரன் வீட்டு பக்கம் போய் வருவதை எத்தனையோபேர் கவனித்து என்னிடம் சொன்னார்கள். நமக்கென்னத்திற்கு ஊர் வம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/138&oldid=841348" இலிருந்து மீள்விக்கப்பட்டது