பக்கம்:செவ்வானம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 செவ்வானம் கடுசரமாக்கி அவள் மனதைப் புண்படுத்தித்தான் மகிழாலாமே என்று நினைத்துப் பேச்சை வளர்த்தார். அதையே தொடர்ந்தார். தாமோதரன் உனக்கு என்ன நன்மையைச் செய்துவிடப் போகிறான்? அவனைத் தேடித் தேடிப் போகிறாயாமே. உனக்கும் அவனுக்கும் என்ன உறவு? என்று கேட்டார் கிண்டலாக அதைப் பற்றி உமக்கு என்ன கவலை? உமது வேலையைக் கவனித்துக் கொண்டு நீர் வந்த வழியே போகலாம் என்று அவள் சொன்னதும் அவர் பிரமித்துவிட்டார். அவள் அவரிடம் காட்டிய மரியாதையில் ஒருபடி இறங்கிவிட்டது. அவர் மனதை உறுத்தியது. அவன் ஒரு அயோக்கியன். அவனை நம்பி நீவீணாகக் கெடப் போகிறாய்! என்றார் அவர். 'உம்மைவிட அவர் யோக்கியமானவர்தான். எல்லோரும் உம்மை நம்பிக் கெடவேணும் என்பது உமது ஆசை போலிருக்கு நான் யாரையும் நம்பி நாசமாகத் தயாராகவில்லை. நீர் சீக்கிரம் போனால் சரிதான் என்று கத்தினாள் அவள். 'மரியாதை இல்லாமல் பேசுறே. நீ மரியாதை இழக்கப் போகிறே ஆமா என்று சொன்ன சிவசைலத்தின் உதடுகள் துடித்தன. உள்ளமும் துடித்தது. ஆனால் அதிகமாகப் பேச்சுக் கொடுக்காமல் கிளம்பினார். உள்ள மரியாதையையும்போக்கும்படி அவள் பேசினாள். நீ ரொம்ப மரியாதை தெரிஞ்சவன். வெள்ளை வேட்டியும் வல்லவாட்டுமா, ஒரு உடை,உடுத்தி ஒரு நடைநடந்து வந்து விட்டான் உன் மரியாதைதான் ஊரெல்லாம் தெரிஞ்சிருக்குதே கார் சவாரியும், சொகுசுச் சாப்பாடும் கிடைத்துவிட்டால் போதுமா? நாய்களுக்குக் கூடத்தான் அதுமாதிரி வாழ்க்கை வந்து சேருது' வீடுவந்து தேடி தன்னை அவமதிக்கத் துணிந்த சிவசைலத்தின் செய்கை அவள் ஆத்திரத்தை, உள்ளக்கொதிப்பை வளர்த்தது. எரிமலையாகப் பொங்கிய அவள் உள்ளம் சுடு சொற்களை வாரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/140&oldid=841351" இலிருந்து மீள்விக்கப்பட்டது