பக்கம்:செவ்வானம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 27 இதை எண்ணிப்பெருமூச்செறிந்தாள் அவள் குமைந்த அவள் உள்ளத்தின் கொதிப்பு சுடுநீராகக் கண்களில் தேங்கியது. அவள் நிற்கவும் வலுவற்றவளாய் தரையில், கிணற்றோரத்தில் உட்கார்ந்து, சுவரின்மீது சாய்ந்துகொண்டுகண்ணீர் வடித்தாள். பேசாதசோகத்தின் சிலைபோல அமர்ந்து அழுதாள். அவளது செயலற்ற தன்மையைக் கண்ட தாமோதரனின் மனவேதனை அதிகரித்தது. சகோதரி என்னை மன்னித்துவிடு. உன்னிடம் நான் முரட்டுத்தனமாக நடந்ததற்காக இதயபூர்வமாக வருந்துகிறேன் என்று தளதளத்த குரலில் அறிவித்தான். அவள் விம்மலுக்கிடையே சொன்னாள்: நான் உங்கள் வார்த்தைகளை நினைத்து வருந்தவில்லை. அழ வேண்டும்போல் தோன்றியது. அழுகிறேன். அழப்பிறந்த நான் இன்னும் எவ்வளவு அழுதுதீர்க்க வேண்டுமோ! - வாழ்க்கையில் ஒளி பிறக்கும். நல்லகாலம் வராமலா போகும்' என்றான் அவன். அவளுக்குத் தேறுதல் கூறும் முறையிலே. 'எல்லோரும் அந்த நம்பிக்கையினால்தான் வாழ்கிறார்கள். எனக்கு அது இருண்டேவிட்டது.' 'ஏன், உனக்கு என்ன நேர்ந்தது? 'என்னதான் நேரவில்லை!" என்று அலுத்துக் கொண்டாள் அவள், அதைத் தொடர்ந்தது நெடுமூச்சு ஒன்று. 'நீ ஏன் வருத்தப்படுகிறாய் என்று சொல்லிவிட்டாவது அழம்மா.நீயார்? சாவதற்காக இந்தக்கிணற்றைத்தேடிஏன் வந்தாய்? ஏன் தயங்கினாய் என்பதையெல்லாம் சொல்லிவிட்டு நீ அழுது கொண்டிரு. அல்லது என்ன வேண்டுமானாலும் செய். இப்பொழுது நான் விஷயம் தெரியாமல் வீணாக வருந்தவேண்டியிருக்கிறதே! என்றான் தாமோதரன். அவனது இயற்கைக் குணம் தானாகத் தலை தூக்கி விட்டதை எண்ணி அவனே சிரித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/29&oldid=841390" இலிருந்து மீள்விக்கப்பட்டது