பக்கம்:செவ்வானம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 29 அவன் சிரித்தான். பெண் பெண்ணேதான் என்பதை நீ ஒவ்வொரு செயலிலும் நிரூபிக்கிறாய். இப்பொழுதுள்ள பயம் நீ வந்தபோது எங்கே போயிருந்தது? இப்பவும் அதை அங்கேயே அனுப்பிவிடுவதுதானே' என்றான். 'உங்கள் யோசனையை யாரும் கேட்கவில்லை என்று சீறினாள் அவள். ‘மிகுந்த நன்றி! என் யோசனையும் உதவியும் இப்பொழுது தேவையில்லாமல் போகலாம். என்றாவது அவசியம் ஏற்பட்டால் எனக்கு அறிவித்தால் என்னாலானதைச் செய்கிறேன். என் பெயர் தாமேதரன். எனது விலாசம், அதைச் சொன்னால் காற்றோடு போய்விடும், வேண்டுமானால் எழுதித் தருகிறேன்.' அவள் பேசாமல் நடந்தாள். தாமோதரன் இரவின் இனிமையை, எழிலை, தனிமையைச் சிறிது நேரம் ரசித்து நின்றான். பின் தனது அறையை நோக்கி நடந்தான். மீண்டும் அதேசத்தம் கேட்டது. சரசரப்பு. காலடிஒசையாக இருக்குமோ? அவள் அசையும் சத்தம் தானோ? அவன் தயங்கி நின்றான். சத்தம் ஒடுங்கி விட்டது. அவள் நடந்து கொண்டிருந்தாள். நிற்கவில்லை. ஆகவே அவள் காலடி ஒசையல்ல அது. அவ்வாறெனில் வேறு யார் அங்கிருக் கிறார்கள்? பதுங்கி நின்று கவனித்திருக்கிறார்களா? புரியவில்லை. அவள் யார்? அவளைச் சேர்ந்தவர்கள் யாராவது. தெளிவு பிறக்க வழியில்லை. அவன் வேகமாக நடந்தான். சிரிப்புச் சத்தம் கேட்டது. இப்போது பெரிய யோக்கிய சிகாமணி போல் பேசுகிறவரு இவருதான் அண்ணேய்' என்றொரு குரல் வெடித்தது. அது தான் தெரியுதே இரவிலே காதல் நாடகம் நடத்திவிட்டு கன்னியை இருளோடு இருளாய் தனியாக அவசரம் அவசரமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/31&oldid=841394" இலிருந்து மீள்விக்கப்பட்டது