பக்கம்:செவ்வானம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 33 சித்திரம்போல் தான் திகழ்ந்து கொண்டிருந்தது. காலையின் இனிய மணம் எங்கும் நிறைந்திருந்தது. குளிரும் கலந்திருந்தது. தாமோதரன் நினைத்தான் இனிமேல் தூங்குவது எங்கே! இன்றிரவு பூராவும் தூக்கம் பொங்கல்! என்று. ஒரு இரவின் எதிர்பாராத நிகழ்ச்சிகள் மனதில் நிழல் படம் போல் - ஆனால் தொடர்பற்றதுள்ளல்களுடன் - தலை துக்கவும் அவனுக்கு வியப்பும் வேதனையும் தான் எழுந்தன. நடந்தவை நடந்தேறிவிட்டன. அவற்றைப்பற்றி வியந்தாலென்ன வேதனைப்பட்டால்தானென்ன? இனி வரவிருக்கும் விளைவுகளை அவை தவிர்த்துவிட இயலுமா? இயலாது இயலாது. உள்ளுறை பண்பாய் ஒண்டிக்கிடக்கும் சின்னப்புத்தி கீச்சுக் குரல் கொடுத்தது. நீ.கந்தர்வகலாமண்டபத் திறப்புவிழாவின் போது தறுதலைத்தனம் செய்துவிட்டு, இப்ப பயந்து சாகவேண்டிய தேவையுமில்லை' அவன் உள்ளமே சினந்து சீறியது. பயந்து சாவதா இல்லை. ஒரு சிலர் பகட்டாக வாழ்க்கை நடத்துவதற்காக ஊரை, உலகைச் சுரண்டிப்பிழைக்க அவர்கள் செய்கிற வீணத்தனங்களைக் கண்டும் சும்மா இருக்க முடியுமா? ஊருக்கு நல்லதை எடுத்துச் சொல்வதா தறுதலைத்தனம்? தனக்குச் சரியென்று பட்டதைத் துணிந்து சொல்லாமல் தயங்கி நிற்பதும், பணத்திற்கும் பட்டம் பதவிகளுக்கும் கைகட்டி நிற்பதும்தான் பயங்கொள்ளித்தனம். முட்டாள்தனம் கூட! 'இன்றைக்கென்று விளக்கிலே எண்ணெய் இல்லாமல் போயிற்றே சனியன். விளக்கிருந்தாலாவது படிக்கலாம் என்று எண்ணிய அவனுக்கு ஒரு உண்மை பளிச்சிட்டது. மெழுகுவர்த்தியும் தீப்பெட்டியும் அலமாரியில் கிடப்பது அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அவசரம் அவசரமாய் இருளில் இலக்குத் தேடி ஒருவகையாகக் கண்டுபிடித்து அவற்றை எடுத்து, ஒளி உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டான். செ. - 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/35&oldid=841398" இலிருந்து மீள்விக்கப்பட்டது