பக்கம்:செவ்வானம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 45 கேட்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு தனது பேச்சைத் தானே கேட்டு மகிழ்ந்து அதனால் மேலும் அதிகமாகப் பேசித் தொன தொணக்கும் போரடிப்புகளுக்கும் குறைவில்லை. அத்தகைய மனிதர்களிலே ஒருவர் தான் அன்பர் சிவசைலம். முதலாளியின் பேச்சை எதிர்பார்க்காமல் அவரே பேசினார்; "சரியாக வேலை செய்திருக்கிறேன். மேடையிலே சூரத்தனம் பேசியமடையனுக்கு நமது வீரத்தனம் காட்டுவதில் தடையேதும் உண்டோ? அஹஹ்ஹா' தமிழ்நாட்டு நாடகம், சினிமா இவைகளையே தம் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு விட்ட சிவசைலம் இவ்விதம் வசனம் பேசுவதைக் கேட்டு யாரும் அதிசயிப்பதற்கில்லை. 'ஏது இன்றைக்கு உற்சாகம் தாங்க முடியவில்லையா? என்று கேட்டு வைத்தார் புன்னைவனம். இருவரும் தனி அறையில் வந்து உட்கார்ந்தனர். ஒரு முக்கிய விஷயமாய் பேசணும் என்பதற்காக உங்களுக்கு ஆள் அனுப்புவதற்கிருந்தேன். அதேசமயத்தில் நீங்களே வந்து விட்டதாகத் தெரிந்தது என்று சொன்னார். 'நாடகத்து நாரதர் போல அவர் குணமே அதுதானே? நினைப்பதற்கு முன்னால் ஒடி வந்து நிற்பார். இல்லையா? 'அவன் கெட்டான் நாம் இந்தப் பயல் தாமோதரனைச் சும்மா விடப்படாது...' என்று தொடங்கினார் முதலாளி. விட்டேனா பயலை வைத்தேனே வேட்டு' என்று சிவசைலம் நாவலித்ததைக் கேட்டுத் திடுக்கிட்டார் புன்னைவனம் என்ன, ராவோடு ராவாத் தீர்த்துப் போட ஏற்பாடு பண்ணிவிட்டீங்களா? என்று பதறினார். 'அப்படிச் செய்வேனா எதையுமே நாடக ஸ்டைலிலே செய்தால் நல்லது பாருங்க. அவன் ஸ்டன்டுக்கு எதிர் ஸ்டன்ட் அவ்வளவுதான். இந்த நேரத்திற்கெல்லாம் பயல் அரண்டு போய் கிடப்பானா, சும்மாவா! நம்மை லேசாக நினைத்துவிட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/47&oldid=841411" இலிருந்து மீள்விக்கப்பட்டது