பக்கம்:செவ்வானம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 51 ஆனால் இனி என்ன செய்வது என்ற பிரச்னை தேயாமல் நின்றது. அதை அவள் ஒட்டவில்லை. விரட்டிவிடமுடியுமா? அவள் அவனிடம் கேட்கவில்லை. அவள் எண்ணம் குழம்பிய உள்ளத்தினளாய் நடந்து கொண்டிருந்தாள். வேதனையே துணையாக முன் சென்றாள். விடிவின் ரேகை வெளுத்த கீழ்வானத்திலே சிரித்தது. சிரித்த வெள்ளிகள் பறித்த பூக்கள் போல் மாயக்கூடை எதிலோ பதுங்கிவிட்டன. ஒளி சிரித்தது உலகெலாம். தென்றல் சிரித்தது குளுமையாக, பறவைகள் சிரித்தன விதவித ஒலிகள் எழுப்பி, ஊர் முழுவதும் சிரித்தது உயிப்பைச் சிலிர்க்க வைத்து குமுதம் சிரித்தாள். தானாகவே சிரித்துக் கொண்டாள். அவள் உள்ளத்தில் வெடித்த எண்ண மலர் ஒன்றின் தன்மையை உணர்ந்து, அவளுக்கு ஒரு கதை நினைவிலெழுந்தது. புராணம் என்ற பெயரிலே கதைத்த அளப்புகளில் ஒரு ரிஷி யாகத்திலே பூதம் ஒன்றை உருவாக்கினான். பஞ்சவரை அழித்துவிட்டு வா என்று ஏவினான் எதிரியிடம் கூலி பெற்றிருந்த அத்தவசி எண்ணம் பலியாமல் போனால் உன்னையே கொன்று விடுவேன் என்று சொல்லிப்போனது பூதம். நச்சுப் பொய்கை ஒரத்திலே செத்தவர்கள் போல் கிடந்தார்கள் சாவிற்கு ஆளாக வேண்டியவர்கள். தாடி முனி ஏய்த்துவிட்டான் என உறுமியது பூதம். திரும்பி வந்தது. ஆக்கியவனையே அழித்துவிட்டது. நல்ல கதை வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்தவர்கள் கதைகளுக்குக் குறைவு ஏது? நானும் அப்படி மாறவேண்டியதுதான்போலும் என்று நினைத்தாள் குமுதம். 'சாக வந்தவளைச் சாகாதே என்றாய். வாழ வழி காட்டு. இல்லையெனில் உன்னை பழிசேரும் என்று பயமுறுத்தவேண்டியது தான். இப்படி எண்ணவும் அவளுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது. அவள் சிரித்தாள், விண்ணும் மண்ணும் பேரொளியால் புத்துயிர்ப்பால் சிரித்துத் திகழ்ந்த வேளையிலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/53&oldid=841418" இலிருந்து மீள்விக்கப்பட்டது