பக்கம்:செவ்வானம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 65 இந்த ஆசை முதலில் குடும்பத்தினுள் வளர்கிறது. பின் தெருவில், ஊரில், தன் சமூகத்தில், நாட்டில் எங்கும் பிரதிபலிக்கும்படி விஸ்வரூபமெடுக்கிறது. தமிழ்நாட்டிலே புகழெடுத்தவன் இந்தியா பூராவும் தன் பெயர் பரவ வேண்டும் என ஆசைப்படுகிறான். தேசமெங்கும் புகழ் பரவியதும் உலகப் புகழ் பெறவேணும் என்ற ஆசை வளர்கிறது. இதற்கு முடிவே கிடையாது. வளர்ந்து செல்லும் சக்தி இது. இந்தப் பசியினால் தான் புன்னைவனம் செயல் புரிகிறார். அவருக்குத் துணையாக சிவசைலமும் தொண்டாற்றுகிறார். பணத்தோடு பணம் சேரும், புகழோடு புகழ்சேரும் பணம் இருந்தால் சுலபமாகப் புகழை விலைக்கு வாங்கிவிடலாம். புகழ் மாத்திரம் கிடைத்தால் பயனில்லை. பணமும் கிடைக்காது. உயிர் வாழவும் முடியாது. சிலசமயம் தனது புகழ் தனக்கே வினையாவது முண்டு. உண்மையைச் சொல்லவேண்டும், எனக்குச் சரியென்று பட்டதை நான் சொல்வேன் என்று கிளம்புகிற என்னைப் போன்றவர்களுக்கு புகழ் கிடைக்கும். பணம் வராது. ஆகவே பட்டினி கிடக்கவேண்டியது தான். நாம் இருப்பதை உணர்த்தி வருகிறோம் என்ற பெருமை - தற்சிறப்பு மோகம் - திருப்தி தரலாம். ஆனால் அது வயிற்றை நிரப்பி விடாது. வாழ்க்கை வசதிகளைப் பெற்றுத் தராது. 'கந்தர்வ கலா மண்டபம் உண்மையில் ஜம்பக் கலைக்கூடம் தான். புகழும் பணமும் பண்ணத் துணை புரியும் சுரங்கம் வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப்பட்டவர்களது போதையைத் திருப்தி செய்வதற்காகப் படமும், கூத்தும், சதிரும் ஆடப்போகிற அரங்கம். அதன் உண்மைத் தன்மையை உணர்ந்தும், அதை நிர்மாணித்தவர்களின்நோக்கத்தை அறிந்திருந்தும், நான்கும்பலிலே கோவிந்தா போடவேண்டும் எனப் பிறர் எண்ணுவார்களானால் அவர்கள் என்னை உணர முடியாதவர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/57&oldid=841422" இலிருந்து மீள்விக்கப்பட்டது