பக்கம்:செவ்வானம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 57 தாமோதரன தொடங்கிய பேச்சை முடித்தான் ரகுராமன் நீ. உருப்படாத செயல்களைச் செய்து வருகிறாயாக்கும்' என்று. 'நான் உருப்பட்டாலென்ன, உருப்படாமல் போனாலென்ன! ха - - - - * - - யாராவது உருப்படவேண்டும். அதுதான் என் ஆசை என்று சொன்னான் தாமோதரன். 'உனது யோசனைகளைக்கேட்டு நடந்தால் எவர்தான் உருப்பட முடியும் எனக்குத் தோன்றுகிறது. உலகத்தையும் மற்றவர்களையும் பற்றிக் கவலைப்படுவதை நீ விட்டு விட்டு, உன்னைப் பற்றியே நீ கவலைப்படுவது நல்லது. உனது வாழ்க்கை முறைகளைச் சீர்திருத்தி உருப்படியாக வாழ முயல்வது சிறந்தது. அதற்காக உனது ஸ்டன்ட் வேலைகளை மூட்டைகட்டி வைத்து விடவேண்டும். நீ சுயசரிதம் எழுத விரும்புகிறேன் என்றாயே சுயசரிதை சாரமற்றதாகி விடப்படாது; சுவையுள்ளதாக இருக்கவேண்டும் என்பதற்காக நீ வலிந்து பல விஷயங்களை அவ்வப்போது செய்து முடிக்கத் துடிக்கிறாய் என்று நினைக்கிறேன். அது விபரீதமாக முடிந்தாலும் முடியலாம். உன் சுய சரிதத்திற்குச் சுவையான புள்ளிவிவரங்கள் கிடைப்பதற்குப் பதில் உனது வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி குத்தப்படலாம். எதற்காக பலரது விரோதத்தை வீணாகச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்? நேற்று இரவு விழாவிலே நீ அப்படிப் பேசியதனால் உனக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிட்டது? அநாவசிய மான, உமது பாஷையிலேயேதான் சொல்ல வேண்டியிருக்கிறது வருத்தம் - வீனத்தனம் என்றுதான் குறிப்பிடவேணும் என்று பேசி நிறுத்தினான் நண்பன். 'ரொம்பசந்தோஷம் இதைப் படித்துப் பார்த்துக் கொள் என்று. தான் எழுதி வைத்த குறிப்பை அவனிடம் நீட்டினான். அப்பொழுதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அந்தப் பெண்ணைப் பற்றி எதுவுமே எழுதவில்லையே என்று. அப்படிப் பார்த்தால், இரவில் நடந்தது எதையுமே பற்றிக்குறிக்கவில்லையே; பொதுவான அளப்பாகத்தானே இருக்கிறது.அந்தக் குறிப்பு.இவ்விதம் குறுகுறுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/59&oldid=841424" இலிருந்து மீள்விக்கப்பட்டது