பக்கம்:செவ்வானம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} செவ்வானம் பல பத்திரிகைகளுக்குப் போய் திரும்பி வந்ததை நானும் தான் படித்துப் பார்க்கட்டுமே என்ற நல்லெண்ணத்துடன் இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்தான். யார் அந்தப் புண்ணியவான் எனப் பெயரைத் தேட முயன்று கண்டு பிடித்ததும் அடடா, புண்ணியவான் என்று சொன்னது தப்பு: புண்ணியவதி என்றல்லவா குறிப்பிடவேண்டியிருக்கிறது என்று தன் நெஞ்சுக்கு அறிவுறுத்தினான். கதையுடனிருந்த கடிதத்தில் 'குமுதம்'என்று கையெழுத்திட்டிருந்ததே இதற்குக் காரணம். கடிதத்தைப் படித்த தாமோதரன் உள்ளத்தில் ஆசை துடிதுடித்தது. அட அவளா! அவள் பெயர் குமுதமா? அவள் வாழ்க்கைக் கதையாமே இது என்று வாசித்து உண்மையை உணரும் முயற்சியில் பரபரப்புடன் ஈடுபட்டான் அவன். 11 தாமோதரனின் கவனிப்பைப் பெறுவதற்காகக் கிடந்த கையெழுத்துப் பிரதியுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் குமுதம் இவ்விதம் எழுதியிருந்தாள் என்னைச் சாகவிடாமல் தடுத்ததற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவிப்பதா அல்லது வருத்தம் அறிவிப்பதா என்றே எனக்குப் புரியவில்லை. நான் வாழ வேண்டியிருக்கிற வருங்காலம் முழுவதிலும் சமய சந்தர்ப்பங் களுக்கேற்ப இரண்டில் ஒன்றை நான் உங்களுக்கு அர்ச்சித்துக் கொண்டேயிருப்பேன் எனது நன்றி கூறலோ வசைபாடலோ அவ்வப்போது உங்களுக்கு நேரடியாகக் கிடைக்காமல் போகலாம். என்றாலும் நான் உங்களையும் உங்கள் செயலையும் மறந்துவிட முடியாது. இனிவரும் எனது வாழ்க்கைக்கு நீங்கள் தான் பொறுப்பு. அதனால் என்னுடைய பூர்வ கதையையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. என் வரலாறு இத்துடன் உள்ளது. திடீரென்று உங்களை என் வாழ்க்கைப் பாதையில் குறுக்கே (சனியன் போலவா, தேவதூதன் மாதிரியா என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க முடியும்) கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/62&oldid=841428" இலிருந்து மீள்விக்கப்பட்டது