பக்கம்:செவ்வானம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 செவ்வானம் போமய்யா நீரு ஒண்ணு' என்ற புன்னைவனம் எதையோ எண்ணிச் சிரித்தார். எண்ணத்தை வெளியிட விரும்பாதவராய் சரி வாரும். சாப்பிடப்போகலாமே என்று அழைத்தபடிஎழுந்து உள்ளே போனார் வாலை ஆட்டிக்கொண்டு எசமான் பின் தொடரும் ஜாதிநாய் மாதிரி அவரைத் தொடர்ந்தார் சிவசைலம். 15 தாமோதரனின் மனம் பொதுவாகவே எண்ணங்கள் குழம்பும் சுழல்தான். கொதிக்கும் உணர்ச்சிக் குமுறல்கள் சிறுசிறு குமிழ்களும் அலைகளும் எழுப்பி அவனது அமைதியைக் கெடுக்கும். அதற்குக் காரணம் கூட வேண்டுமா என்ன! தன்னைப் பற்றியே எண்ணிப் புழுங்குகிறவனுடைய உள்ளமே காளவாயாக மாறிவிடுவது உண்டு. தன்னை, தனது நலன்களை, வசதிக்குறைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு விட்டு மனிதவர்க்கம், சமுதாய நிலை, உலகம் போகிற போக்கு, பணக்காரர்களின் அட்டூழியங்கள், வாழ்க்கை வசதிகள், வஞ்சிக்கப்பட்டிருப்பவர்களது தினசரிவேதனை இவற்றையெல்லாம் பற்றி எண்ணி எண்ணி விடைகாண முடியாமல் திணறுகிற சிந்தனையாளனின் உள்ளம் எரியும் அடுப்பிலே உலைப்பானையில் கொதிக்கும் நீர் போல் குமிழ்விட்டு அலை சுழற்றி அல்லலுறுவதில் வியப்பில்லை. . - அதிலும் 'கந்தர்வ கலா மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவன் எண்ணக் குழப்பம் வளர்ந்து வந்தது. பணம் படைத்தவர் மேலும் மேலும் பணத்தை வளர்ப்பதற்காகச் செய்கிற வேலைகளையும், புகழாசையினால் செய்கிற திருப் பணிகளுக்குகலை, மதம், அரசியல், இலக்கியம், சமூகசேவை என்ற மயக்குப் போர்வைகளைப் போர்த்திக் கொள்ளத் தயங்காததையும் எண்ணிக் குமைந்தது அவன் சிந்தனை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/84&oldid=841452" இலிருந்து மீள்விக்கப்பட்டது