பக்கம்:செவ்வானம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 93 அவன் இருக்கிற பக்கமே திரும்புவதில்லை என்ற வைராக்கி யத்துடன் நடந்தாள் குமுதம், 17 முதலாளி புன்னைவனத்தின் துணைவனாய், வழிகாட்டியாய், காரியதரிசியாய் காலம் கழித்த அன்பர் சிவசைலம்தான் கவனித்தாக வேண்டிய அலுவல்கள் திடீரென்று அதிகரித்துவிட்டதை உணர்ந்தார். தாமோதரனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணமே முதலில் இருந்தது அவருக்கு பிறகு அவன் வாழ்வில் குறுக்கிட்ட குமுதத்தையும் கவனிக்க வேணும் எனும் ஆசை பிறந்தது. முதலாளியின் நாடக முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது அடிப்படைத் திட்டம். அது இப்போது பல கிளைகளாக வளர்ந்து விட்டது. முதலாளிக்காக சியாமளாவை கவனிக்க வேண்டியிருக்கிறது என்றும் நினைத்தார். பிறரது துணையினால் தனது வாழ்க்கையைச் சொகுசானதாக மாற்றிக் கொள்ள வேண்டும் எதிர்ப்படும் சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தத் தவறிவிடக்கூடாது என்ற லட்சியம் அவருடையது. அது அகண்டது. மிக உயரமானது. எந்த உருவமும் எடுக்கக்கூடியது. எத்திக்கிலும் நெளிந்து வியாபிக்கக் கூடியது. ஆகையினாலே இப்போது அவர் இலட்சியத்தில் புது விழுது பாய்ந்ததில் வியப்பில்லை. ‘சாவித்திரி ரொம்ப நன்றாக இருக்கிறாள். ஃபிரீயாகப் பழகுவாள் போல் தோன்றுகிறது. அவளை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று அருள் புரிந்தது அவர் மனம், அவரது அகராதியில் கவனிக்கவேண்டும் என்ற பதத்திற்கு எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப, நபர்களுக்குத் தகுந்தபடி அதன் பொருளும் மாறும், இவ்விதம் கவனிக்க வேண்டியவர்களின் பட்டியல் வளர்ந்து விட்டதனால், எதை அல்லது யாரை முதல் கவனிப்புக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/95&oldid=841464" இலிருந்து மீள்விக்கப்பட்டது