பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

91


காரணமாய் உடன் நிகழ்வன அச்சமும் அன்பும் என்னும் இருவகையுணர்வுகளே என்னும் உண்மையினைத் தெளிவு படுத்துதல் காணலாம்.

நாகரிகமின்றி நாடோடிகளாகத் திரிந்துஅல்லலுற்ற மக்கட் கூட்டத்தார் ஒரிடத்தே நிலையாகத் தங்கி வாழும் வாய்ப்பினைப் பெற்றபின் தமக்கு ஆதாரமாயமைந்த நிலத்தையும் வானையும் கூர்ந்து நோக்கினர். நிலத்திைைனச் சூழ்ந்த விண்வெளியிலே தவழ்ந்து கதிரொளி பரப்பிக் க்ாரிருள் கடிந்து மண்ணுலகில் வாழும் உயிர்களுக்கு ஒளி வழங்கும் ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்களையும் குளிராலும் பசியாலும் வருந்தும் மக்கள் குளிர் நீங்கவும் உணவினைப் பதஞ்செய்து கொள்ளவும் உதவும் தீயினையும் தெய்வமாகக் கருதிப் போற்றுவாராயினர். இருளிற் பொருள் புலனாகாது, பல்வகைத் தொல்லைகட்கும் உட்பட்ட பல்லுயிர்களும் இருள் நீங்கிப் பொருளுணரவும் வெயில் வெம்மை நீங்கித் தன்னொளி பெறவும் குளிர் நீங்கி உணவினைத் தேடிப் பதஞ் செய்து கொள்ளவும் கதிரவனையும் திங்களையும் தீயையும் தெய்வங்களாகக் கொண்டு போற்றும் வழிபாடுகள் உலகிற் பலவிடங்களிலும் பரவி வாழும் எல்லாவினத்து மக்களாலும் மேற்கொள்ளப் பெற்ற இயற்கைத் தெய்வ வழிபாடுகளாகும். உயிர்கள் யாவும் தமக்கு இன்றியமையாத உணவாகிய நல்ல நீரைப் பெற்று உயிர்வாழவும் ப்யிர்கள் வளர்ந்து நன்கு விளைவு பெறவும் கைம்மாறு கருதாது மழை பொழியும் முகிலையும், விண் முகில் பொழிந்த நன்னீர் பலவிடங்களிலும் நிலையாகப் பாய்ந்து நிலவளம் சுரக்கவுதவும் கங்கை காவிரி முதலிய பேராறுகளையும் உண்ணுதற்கினிய கனிகளையும் தண்ணிழலையும் தரும் தாவரங்களையும் பாற்பயனளிக்கும் ஆனினங்களையும் தெய்வத்தன்மையுடையனவாகக் கருதி வழிபடும் இயற்கைப் பொருள் வழிபாடுகள் மக்கட் குலத்தாரது நுகர்ச்சி வேட்கை காரணமாகவும் அவ்வேட்கை நிறைவேறப்பெற்ற நிலையில் தோன்றும் நன்றியுணர்வு காரணமாகவும் நிகழ்வனவாம்.

தமமினத்தார்.அச்சமின்றி இனிது வாழ்தல் வேண்டும்