பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

97


“முக்கண்ணான் மூவெயிலும்

உடன்றக்கல் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற் சீறருங்கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற்றுதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர் ஆறுகெடவிலங்கிய அழலவிர்ஆனிடை’ (பாலைக்கலி )

என்பது மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலம் வேனிற் பொழுதிற் கதிரவன் வெம்மையால் தன்னியல்புதிரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறு முல்லையுங் குறிஞ்சியும் வேனில் வெம்மையால் தம்மியல்பு திரிந்து பாலையாயினவாறுணர்ந்த இளங்கோவடிகள்,

“வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்

காலை” (சிலப். காடுகாண். 62-7)

என வேனிற் பருவத்தே நண்பகற் பொழுதிற் கதிரவன் வெம்மையால் திரிந்து வளங்குன்றி நடத்தற்கு இயலாத அரிய வழியாகிய சுரத்தினைப் பாலையென்ற பெயராற் குறித்துள்ளார்.

'குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலையாகும் . . . . . தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர்” என்பர் இறையனார் களவியலுரையாசிரியர். அவ்வாசிரியர் குறித்த வண்னம் பகவதியாகிய கொற்றவையைப் பாலைநிலத் தெய்வமாக இளங்கோவடிகள் சிலப்பதிகார வேட்டுவ வரியிற் போற்றியுள்ளமையும், முல்லைநிலத் தெய்வமாகிய மாயோனுக்குத் தங்கையும் குறிஞ்சிநிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயும் ஆகிய உறவின்முறைத் தொடர் புடைய கொற்றவை முல்லையுங் குறிஞ்சியும் திரிந்து

சை. சி. சா. வ. 7