பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

117


ராயினும் பொருள்தேடச் சென்ற அவர் நின்னைப் பிரிந்து வேற்று நாட்டகத்தே தங்கியிருக்கும் வன்மையுடையராக வுள்ளார். ஆகவே இங்ங்னம் சூளுறவில் தவறிய அத் தலைவரை வருத்துதலைத் தவிர்வாயாக; தெய்வமாகிய நீ அத்தலைவர்க்கு அருள்சுரந்து வாழ்க’ என்று வேண்டிக் கூளிச் சுற்றத்தொடு பொருந்திய கடவுளுக்கு உயர்ந்த பூப்பலியினைத் தூவிப் பரவி வழிபட்டு வருதற்குச் செல்வோமாக” என்பது இப்பாடற் பகுதியின் பொருளாகும். இதன்கண் தலைவன் தான் தெய்வத்தின் முன்னிலையிற் செய்த சபதத்தில் தப்பி ஒழுகுதலால் தெய்வம் அவனை ஒறுத்துவருத்தும் என்று அஞ்சிய தோழி அங்ங்னம் வருத்துதலைத் தவிர்த்தருள்க எனக் கடவுளைப் பரவி வழிபடுதற் பொருட்டுத் தலைமகளை அழைத்தாள் என்ற செய்தி இப்பாடலில் இடம் பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும்.

தான் தவறு செய்யவில்லை என்பதனை உறதிசெய்யும் முறையில் தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்யும் பழக்கமும் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வருகின்றதென்பதும் தெய்வத்தின் முன்னிலையிற் பொய் கூறுதல் அடாதென்பதனை யறிந்திருந்தும் உலக வாழ்க்கையில் தாம் செய்த தவறுகளை மறைத்தல் வேண்டித் தெய்வத்தின் முன்னிலையிற் பொய்ச் சூள் செய்பவர்கள் இந்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டி நகைக்கும் முறையிற் பாடப் பெற்றது அகநானூறு 166ஆம் பாடலாகும். காவிரியாற்றிற் பரத்தையொடு புனலாடி மகிழ்ந்த தலைவன், அது கேட்டுத் தன் மனைவி புலந்தாளாக, யான் 'பரத்தையொடு புனலாடினேனல்லேன்' என அவட்குப் பொய்ச் சூள் செய்தான். அச்செய்தியைக் கேள்வியுற்ற பரத்தை தன் பக்கத்திலுள்ளார் கேட்ப நகையாடிக் கூறுவதாக அமைந்தது அவ்வகப்பாடலாகும்.

“பழம்பன் னெல்லின் வேளுர் வாயில்

நறுவிரை தெளித்தநாறினர் மாலைப் பொறிவரியினவண்டுதலகழியும் உயர்பலி பெறுஉம் உருகெழுதெய்வம்