பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தொடர்களாற் புலனாம். மக்கள் தமக்கென அமைத்துக் கொண்டுள்ள இல்லங்களிலும் மனைவாயில் நிலைகளிலும் தங்களை இடர் நீக்கிக் காக்கும் தெய்வம் உறைகின்றது என்னும் நம்பிக்கையுடைய ராய்த் தம் மனைக்கண் தெய்வத்தினை வழிபட்டு வந்தனர். இக்குறிப்பு அணங்குடை நல்லில் (மதுரைக் 578) எனவும், 'அணங்குடை நெடுநிலை’ (மதுரைக், 578) எனவும், அணங்குடை நெடுநிலை’ (மதுரைக் 535) எனவும் வரும் மதுரைக் காஞ்சித் தொடர்களால் இனிது புலனாதல் காணலாம். இவ்வாறு மனைக்கண் உறைந்து மக்களைக் காக்கும் தெய்வத்தினை 'இல்லுறை தெய்வம் (மதுரைக். நச். உரை) இல்லுறை கடவுள் (அகம். 282) எனப் போற்றுதல் மரபு. வீட்டுத் தெய்வத்திற்குப் படைத்தல் என்னும் இவ்வழக்கம் தமிழகத்தில் இக்காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றமை இங்கு நினைத்தற்குரியதாகும். அணங்கு என்னும் சொல் தெய்வத்தின் எல்லையற்ற பேருருவினையும் பேராற்றலையும் குறிக்கும் பொருளினதாக நக்கீரனாரால் ஆளப்பெற்றுள்ளது. குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் மக்களது கட்புலனுக்கு அடங்காத தனது பேரொளி வாய்ந்த பேருருவமாகிய உயர்ந்த பெருந் தோற்றம் காண்போர்க்கு அச்சந்தரும் இயல்பின தாதலின் அப்பெருந்தோற்றத்தினைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பண்டைக்காலத்து வள்ளியை மனத்தற் பொருட்டு எளிவந்தருளிய மனங்கமழ் தோற்றத்து இளையோனாகக் கண்முன் தோன்றி அச்சமகற்றி அருள் புரியும் திறத்தினன் என்பதனை,

$$. - - - -

அணங்குசால் உயர்நிலைதழி இப்பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங்காட்டி’

(திருமுருகு. 289-290)

எனவரும் தொடரில் நக்கீரனார் விளக்கியுள்ளமை இங்கு அறியத்தகுவதாகும். அணங்கு என்னும் சொற்போன்றே 'சூர் என்ற சொல்லும் வருத்துவது என்ற பொருளிலும் ‘தெய்வம்' என்ற பொருளிலும் சங்கச் செய்யுட்களில் ஆளப்பெற்றுளது. சூருறுமஞ்ஞையின் நடுங்க” (குறிஞ்சிப், 169) என்ற தொடர்க்குத் தெய்வம் ஏறின மயில்போல