பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

129


தலைமகளுடைய தோளினை நெகிழ்வித்து வாட்ட முறும்படி செய்த பிரிவுத் துன்பத்தினைப் போக்குதற் பொருட்டு விருந்தாக வந்து சேரும் வண்ணம் தன் குரலால் நின்னை அழைத்த காக்கைக்குப் பலியுணவு தருதல் வேண்டித் திண்ணிய தேரையுடைய நள்ளியென்னும் வள்ளலுக்குரிய கானத்திலே ஆயர்கள் மேய்க்கும் பலவாகிய பசுக்கள் தந்த பாலின் நெய்யினோடு தொண்டியென்னும் ஊர்ப்பக்க முழுவதும் விளைந்த வெண்னெல்லால் ஆகிய வெண்சோற்றினை ஏழுகலங்களில் வைத்துப் படைத்தாலும் காக்கை செய்த நன்றியை நோக்க அது சிறிய பலியுணவாகவே கருதப்படும்” என்பது இக்குறுந்தொகைப்பாடலின் பொருளாகும். எடுத்துக்காட்டிய இருபாடல்களும், மனைப்பக்கத்தில் உறையும் காக்கை கரைந்தால் அவ் வீட்டிற்கு அன்புடையவர்கள் விருந்தாக வந்து சேர்வார்கள் எனவும் மனையறக் கடமைகளுள் ஒன்றாகிய விருந்தோம்புந் திறத்தில் விருந்தினர் வருவர் என்பதனை முன்னறிந்து அறிவிக்கும் திறம் காக்கைக்கு உண்டெனவும் தனக்குக் கிடைத்த உணவினைத் தான் மட்டும் உண்ணாது, தன் இனத்தையும் அழைத்து உண்னும் பண்புடைய காக்கைக்குத் தாம் உண்பதன் முன் பலியாக உணவு அளித்தல் வேண்டும் எனவும் தமிழ் முன்னோர் கொண்டிருந்த நம்பிக்கையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

தெய்வம் உறையும் பொதுவிடங்களில் நிகழும் வழிபாட்டில் தரப்படும் பலியுணவினையேற்று உண்ணுதற் குரியது காக்கை யென்பதும் ஊர் மக்கள் தெய்வத்திற்கெனத் தரும் பலியுணவினையுண்ணும் விருப்புடன் தெய்வம் உறையும் ஆல் முதலிய மரங்களின் கிளைகளில் தங்கிய காக்கைகள் பகற்காலத்தில் அங்கு இடப்படும் பலி யுனவினையுண்டு அந்திக் காலத்தில் தத்தம் இருப்பிடங் களைச் சேர்ந்து தம் இனத்தொடுதங்கும் என்பதும்,

"நெடுவீழிட்ட கடவுளாலத்து

உகுபலியருந்திய தொகுவிரற் காக்கை

புன்கண் அந்திக் கிளையிற் செறியப்

படையொடுவந்த புன்கண் மாலை” (நற். 343)

எனவரும் நற்றினைப் பாடற் றொடரால் அறியப்படும்.

சை, சி. சா. வ. 9