பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'வியாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை

மடங்கல் உண்மை மாயமோ அன்றே (புறம் 363)

எனவரும் ஐயாதிச் சிறுவெண் டேரையார் வாய்மொழியால் நன்குணரப்படும்.

இவ்வாறு உயிர்கள் செய்த வினையின்மேலிட்டு நடுநிலையில் நின்று அவ்வுயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றத்தின் செயலைத் தடுக்கவல்லார் எவரும் இலர் என்பது,

“மாற்றருஞ் சீற்றத்துமாயிருங் கூற்றம்” (பதிற். 51)

“கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்’ (புறம். 362)

எனவரும் தொடர்களால் வலியுறுத்தப்பெற்றமை காணலாம்.

மேற்குறித்த கூற்றத்தின் செயலை மாற்றுதற்குரிய மருந்து வேறில்லை என்பது,

“மருந்தில் கூற்றத்து அருந்தொழில்’ (புறம். 3)

எனவரும் தொடரால் புலனாம்.

கணிச்சி என்னும் கூரிய மழுப்படை கொண்டு உயிர்களைக் கவரும் திறத்தில் கண்னோட்டமோ, நயமோ காட்டுதலின்றி வெம்மை மிக்க சினத்துடன் காலம் பார்த்துத் தன் தொழிலை நிறைவேற்றுதல் கூற்றத்தின் இயல்பு. இவ்வுண்மை,

"கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்குங் காலை இரங்குவிர்” (புறம். 195) “காலன் என்னும் கண்ணிலி' (புறம். 240) “நயனில் கூற்றம்’ (புறம். 227) “வெந்திறற் கூற்றம்” (புறம். 238) “காலனும் காலம் பார்க்கும்” (புறம். 41)

எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை