பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

151


சிறிய ஆற்றங்கரையிற் பெருங்காற்றால் நடுங்கிச் சாய்ந்த இலக்கமாகிய மரக்கம்பத்தினையொப்ப அம்புகளால் துளைக்கப்பட்டு வீழ்ந்தது; உயர்ந்த புகழ வடிவினனாகிய அவ்வீரனது பெயரோ, புடவையாற் செய்யப்பட்ட பந்தர்க் கீழ் மயிற்பீலி சூட்டப்பட்ட நடுகல்லின் மேலது என்பதும், “நாகினது முலையன்ன நறிய பூவினையுடைய கரந்தையை அறிவுடையோர் சூட்டும் முறையிலே சூட்டப் பசுநிரையை இவ்வூரில் மீட்டுத் தந்து நடப்பட்ட கல்லாகிய வென்றி வேலையுடைய தலைவன்’ என்பதும் மேற்குறித்த புறப்பாடற் றொடர்களின் பொருளாகும்.

இங்ங்ணம் நிரை மீட்டற் பொருட்டுப் பகைவரொடு பொருது உயிர்துறந்த வீரர்களது பெயரும் பீடும் பொறித்து நடப்பட்ட கல்வினைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழிபாடு தமிழக மெங்கும் பரவித் தொன்றுதொட்டு நிலைபெற்று வருவதாகும். வீரர்களுக்கு நடப்படும் இந்நடுகல் பலரும் செல்லும் வழியினையொட்டி நடப் பெறும் என்பதும், அங்ங்ணம் நடப்பட்ட கல்லினைப் பானர் முதலிய வழிச் செல்வோர் பலரும் வழிபட்டுச் செல்லுதல் கடனென்பதும், அங்ங்ணம் நடுகல்லைத் தொழுதுபோகவே நடத்தற்கியலாத கொடுங்கானம் மழைபெய்தலாற் குளிரும் என்பதும்,

“பெருங்களிற் றடியிற் றோன்றும் ஒருகண்

இரும்பொறை யிரவல சேறியாயின் தொழாதனை கழிதலோம்புமதி வழாது வண்டுமேம்படுஉம் இவ் வறநிலையாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா விளையர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் ఈ కుడిణు’

(புறம். 263)

என வரும் புறப்பாடலாற் புலனாம். நடுகல்லைத் தெய்வமாகக் கொண்டு தொழுதல் வேண்டும் என்னும் இப்புறப்பாடலை யடியொற்றியமைந்தது “கைவண் குருசில்