பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

157


டின்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட்புடையோர் தம்முழைச் செலினே’

(புறம். 223)

எனவும் வரும் பொத்தியார் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தம்புகழ் நிறுவி உயிர்துறந்த சான்றோராகிய ஆடவர்க்குப் போலவே கற்புக் கடம் பூண்டு உயிர்துறந்த பத்தினிட் பெண்டிராகிய மகளிர்க்கும் நடுகல் நிறுத்தி வழிபடும் மரபு பண்டைக் காலத்தில் நிலைபெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுளது. சேரமன்னனாகிய செங்குட்டுவன் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகிக்கு இமயமலையிற் கல்லெடுத்துத் கங்கையாற்றில் நீர்ப்படை செய்து அக்கல்லிற் படிமம் அமைத்து வஞ்சி நகரத்திற் பத்தினிக் கோட்டம் அமைத்துக் கடவுள் மங்கலம் செய்தமை இளங்கோவடி களால் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் விரித்துரைக்கட் பெற்றது. இந்நிகழ்ச்சி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தோர் உலக மக்களால் கல்வடிவில் தெய்வமாக நிறுத்தி வழிபடப் பெறும் மெய்ம்மையினை விளக்குவதாகும்.

தொல்காப்பியனார் காலத்தில் இறந்தோர் பெயரும் பீடும் கல்லிற் பொறித்து அக்கல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் நிலையிலிருந்த நடுகல் வழிபாடு கடைச் சங்க காலத்தில் பெரும் பொருளை நினைந்து வடக்கிருந்து உயிர்துறந்த வேந்தர்க்கும் புலமைச் சான்றோர்க்கும் உரியதாயிற்று. இக்காலத்திலேயே கணவனுடன் உயிர்துறந்த கற்புடை மகளிர்க்கும் கல்நட்டு வழிபடும் முறையும் தோன்றி நிலைபெற்றது. இவ்வாறு தறுகண் வீரர்க்குரியதாய்த் தோன்றிய நடுகல் வழிபாடு முறையே வேந்தர்க்கும் சான்றோர்க்கும் பத்தினிப் பெண்டிர்க்கும் துறவியர்க்கும் உரியதாக வளர்ச்சி பெற்றது.

சோழ மன்னர்களில் அரிஞ்சயன் முதலியோர்க்கு அமைக்கப்பட்டுள்ள பள்ளிப்படைக் கோயில்கள் பண்டைக் கால நடுகல் வழிபாட்டினை அடியொற்றியமைந்தனவாகவே

கொள்ளத்தக்கன. இக்கோயில்களில் நிறுவப்பெற்ற