பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


தமிழகத்தில் சிற்றுார்கள் தோறும் பிடாரி, மாரி, மாடன், வீரன் முதலிய சிறு தெய்வ வழிபாடுகள் காலந்தோறும் பலவாக விரிந்து தத்துவ வுணர்வு நிரம்பாத பொதுமக்கள் பலராலும் போற்றப்பெறும் டொதுமை நிலையினை எய்தியிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது.

பத்துப்பாட்டு எட்டுத் தொகையாகிய சங்க இலக்கியங்கள் மக்களது வாழ்வியலில் அகமும் புறமும் ஆகிய ஒழுகலாற்றைக் குறித்துப் பாடப்பெற்றனவாயினும், மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத தெய்வ உணர்வையும், வழிபாட்டு நெறிகளையும் ஆங்காங்கே குறித்துச் செல்லக் காண்கின்றோம். பத்துப்பாட்டின் முதற் கண்னதாகிய திருமுருகாற்றுப்படை குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகப் பொருமானிடத்து அன்பர்களை ஆற்றுப்படுத்தும் நிலையில் அமைந்தது. இதனைப் பாடிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இப்பாடலில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள் பற்றிய உண்மைகளைக் குறிப்பிற் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்து உணரத் தகுவதாகும். பத்துப்பாட்டின் ஏனைய ஒன்பது பாடல்களிலும் தெய்வ வழிபாடு பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. எட்டுத்தொகையுள் நற்றினை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய வற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்த பெருந்தேவனார் பாடல்களும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தாக நல்லந்துவனார் பாடிய பாடலும், பதிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்தாகத் தொல்காப்பிய உரையிற் காணப்படும் பாடலும் சிவன், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களைப் போற்றிப் பரவுவனவாக அமைந்துள்ளன. மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடல்களையன்றி அகத்தினை, புறத்தினை ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் இத்தொகைநூற் செய்யுட்களிலே பண்டைக் காலத் தமிழ் மக்கள் மேற் கொண்டொழுகிய தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

முக்கட் செல்வனாகிய இறைவன், சேயோனாகிய முருகன், கண்ணனும் பலதேவனும் என இரு பெருந்