பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திசைகள் கைகளாகவும், குளிர்ந்த கைகளை உடைய திங்களோடு ஞாயிறும் தன் கண்களாகவும், பேருருக் கொண்டு இயலும் எல்லா உயிர்களிடத்திலும் தாம் உயிர்க்குயிராய்ப் பொருந்தி எல்லாப் பொருள்களையும் தனது விரிவிற்குள்ளே அடக்கிய வேதத்தாற் போற்றப்படும் முதற் கடவுள் குற்றமற விளங்கிய சக்கரப் படையை ஏந்திய திருமால் என்று போற்றுவர் சான்றோர் என்பது இதன் பொருளாகும்.

இப்பாடலில் திகிரியோனாகிய திருமாலது உலகளாவிய பேருருவின் தோற்றமும், அம் முதல்வன் உயிர்க்குயிராய்ப் பொருள்கள் தோறும் ஊடுருவி நிற்கும் நுண்ணியல்பும், உலகுயிர்கள் எல்லாவற்றையும் தன் விரிவிற்குள்ளே அடங்கத் திகழும் விரிவுநிலையும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

"இயன்றவெல்லாம் பயின்றகத்தடக்கிய

வேத முதல்வன்”

என இப்பாடலில் வந்துள்ள தொடர், திருமாலுக்குரிய நாராயணன் என்னும் திருப்பெயர்ப் பொருளைப் புலப்படுத்தி நிற்றல் நுணுகி நோக்கற் பாலதாகும்.

மேகம் தவழும் கரிய மலையையும், அம்மலை முகட்டினின்று இழியும் வெள்ளிய அருவி நீரையும் விளக்கப் போந்த கபிலர், கரிய மலைக்குக் கண்ணனையும், வெள்ளிய அருவிக்கு அவன் தமையனாகிய பலதேவனையும் உவமையாக எடுத்துக் காட்டும் நிலையில்,

& & - - - - 4.

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்

வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி” (நற். 32)

எனப் புனைந்துரைத்துள்ளார். இதனால் கரிய மலையையும் அதன் பக்கத்து வீழும் வெள்ளிய அருவியையும் காண்போர் உள்ளத்திலே கண்ணனது கரிய திருமேனியும், பலதேவனது வெளிய திருமேனியும் ஆகிய தெய்வத் தோற்றமும் திகழுமாறு சொல்லோவியம் செய்த கபிலரது புலமைத்திறம்