பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

173


மாயோனைப் பெரும்பெயர் இருவராகப் பரவிப் போற்றுகின்றது.

கல்லென ஒலிக்குங் கருங்கடலும் வெண்மணற் பரப்பாகிய கடற்கானலும் போல வேறுவேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத (காத்தல்) தொழிலினையும் உடைய மாயோனையும், அவனுக்குத் தமையனாகிய பலதேவனையும் தாங்கும் நீண்ட நிலைமையினை உடைய புகழால் உயர்ந்த திருமாலிருஞ்சோலையாகிய பெரிய குன்றம் என்பது மேற்குறித்த பரிபாடற் றொடரின் பொருளாகும். திருமாலாகிய ஒரு தெய்வமே பலதேவனும், கண்ணனும் எனத் தமையனும், தம்பியுமாக இருவேறுருவிற் சங்க காலத்தில் வழிபடப்பட்ட செய்தி மேற்குறித்த பரிபாடற் றொடரால் நன்கு தெளியப்படும். அன்றியும் முல்லை நிலத் தெய்வமாகிய திருமால் சங்க காலத்தில் வாசுதேவன் சங்கருடனன், பிரத்யும்நன், அநிருத்தன் என நால்வகை வியூகமாகவும் போற்றப் பெற்றுள்ளார்.

£6. to - - - -

செங்கட் காரி கருங்கண் வெள்ளை

பொன்கட்பச்சை பைங்கண்மால் (பரிபாடல் 3:81-82)

எனவரும் பரிபாடற்றொடரில் நால்வகை வியூகமும் குறிக்கட் பெற்றன. செங்கட் காரி - வாசுதேவன், கருங்கண் வெள்ளைசங்கருடனன், பொன்கட் பச்சை - சிவந்த உடம்பினை யுடைய காமன், பச்சை என்பது பிரத்யும் நன் என்றும் வடமொழித் திரிபு என்பர் பரிமேலழகர். பைங்கண்மால்பசியவுடம்பினையுடையய அதிருத்தன் - என இவ்வாறு திருமாலுக்குரிய நால்வகை வியூகமும் பரிபாடலிற் கூறப்பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும்.

ஆயிரம் முடியையுடைய ஆதிசேடன், தன் திருமுடி மேல் கவிக்கப்பெற்ற திருமால், திருமகள் தங்கும் மார்பினனாகவும் சங்கைப் போன்ற திருமேனியையும், பனைக் கொடியையும் கலப்பையாகிய படையையும் ஒற்றைக் குழையையும்" உடைய பலதேவனாகவும் விளங்குகின்றான்