பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

177


மாயோயே தீ வளி, விசும்பு, நீர், நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி ஆசானும் ஆக எண் பேருருவினனாக விளங்குகின்றாய். வேட்கின்ற வடிவாகிய அறமும், கோள்கள் எழுவருள் முற்கூறிய ஞாயிறு திங்கள் அல்லாத ஏனைய ஐவரும், திதி ைமந்தராய அசுரரும், விதியின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும், வசுக்கள் எண்மரும், பதினொரு உருத்திரரும், மருத்துவராகிய இருவரும், தருமனாகிய எமலும், அவனது ஏவல் செய்யும் மடங்கலாகிய கூற்றமும், ஒரோவொன்று எழுவகைப்பட்ட மூவகையுலகுகளும், அங்கு வாழும் உயிர்த் தொகுதியும் ஆகிய இவையெல்லாம் நின்கண் தோன்றிப் பரவியுள்ளனவாக வேதம் சொல்லுதலால் யாமும் அவ்வாறே தொடுத்துக் கூறினோம். தாமரை மலரில் தோன்றிய நான்முகனும் அவனுக்குத் தந்தையும் நீயே என்று அந்தணரருமறை கூறும். தேவர்களிடமிருந்து அமுதத் தினைக் கொணர்ந்து தன் தாயின் இடுக்கனைத்தவிர்த்த கருடனை ஊர்தியாக உடையாய். அக்கருடனையே கொடியாகவுமுடையாய். மாவலிபால் மூவடிமண்வேண்டி அளக்கின்ற காலத்து மேற் சொல்லிய மூவேழுலகினுள் கீழுள்ளனவாகிய ஏழுலகத்தினையும் எஞ்சாமற்பரவிய அடியினையுடையாய். எல்லாம் கருகி நீறாதற்குக் காரணமாகிய ந்யும், காற்றும், எமனும், ஞாயிறு பன்னிரண்டும் ஒருங்கு கூடும் ஊழி முடிவிலே எழுகடல் களும் ஒன்றாகிய ஆழிக்கண்ணே அமிழ்கின்ற நிலமகளை அழகிய வராகமாகிப் பெயர்த்தெடுத்தாய் எனவும், புட்கலம் முதலிய மேகங்கள் பொழிய விசும்பினின்றும் வீழும் நீரை அன்னச் சேவலாகி நின் சிறகினாலே வறளும்படிச் செய்தாய் எனவும் முனிவரும், தேவரும் நின்னை விரும்பிப் புகழ்வர். அம்முறையே யாமும் புகழ்கின்றோம். குதிரையுருவினனாகிய கேசி எனும் அசுரனைக் கொன்றவனே! நின் கைகள் எண்ணிறந்தமையால் நின் புகழைப் போன்றன. மோகினி யாகிய நின் வடிவினைக்கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே அவுனர்க்கு அச்சமாய் முடிய அமரர்க்கு நல்லமிர்தினைப் பகுத்திடுதலால் நடுவு நிலைமையில் தப்பிய நலமில்லாத ஒருகையினையுடையனாயினை.

బాmy ? ఈ గా ణ !