பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

181


நினக்குப் பகைவரும் நண்பரும் இலராதலால் குற்றமும் மறமும் உடையாரிடத்து வெகுளியும் கோட்டமும் அவையில்லாரிடத்து இல்லையாதலும் உடையையாய், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும், செம்மையும் உடையையாய் அவை இல்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப் பகையாயினார் உயிரின்கண் அதனை மாற்றுதற் றொழிலும் நினக்கு நண்பராயினார் உயிரின்கண் அதற்கு ஏமஞ் செய்யுந் தொழிலும் உடையையல்லை. உயிர்க ளதியல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளபோலத் தோன்றுவதல்லது நின்னியல்பால் அவை நினக்குள்ளவை யல்ல. அன்பர் மனத்திற் கொண்ட வடிவன்றி நினக்கென வேறுவடிவு உடையையல்ல.

நீலமணி போலும் திருமேனிக்கண் நறுமணம் வீசும் துழாய் மாலையையணிந்தாய். திருமகளாகிய மறுவையுடைய மார்பனே! நின்னுந்தியிற் றோன்றிய தாமரை மலர் போலும் கண்களையுடையாய். அளத்தற்கரியனாகிய நீ அன்பர்க்கு வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் திருவடியினை யுடையாய், நிறைந்த கடவுட்டன்மையினையுடையாய்.

அழல்போலும் தளிரினையும் நிழல் தரும் கிளைகளையும் உடைய, ஆலமரமும், கடப்பமரமும், யாற்றிடைக் குறையும், காற்று வழங்காக்குன்றமும் பிறவு மாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாகப் பகுத்துரைக்கப்படும் பெயர்களை யுடையோய், நின் அன்பர் தொழுத கையினது தாழ்ச்சிக்கண் அகப்பட்டோயும் நீயே. அன்பர் நினைத்தன முடித்தலால் அவரவர் ஏவல் செய்வோனும் நீயே. அவரவர் செய்த அறம்பொருட்குக் காவலாக விளங்குவோனும் நீயே!”- எனக் கடுவனிள வெயினனார் திருமாலைப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, நான்காம் பரிபாடல் ஆகும்.

நீல மலையின்கண் பரந்த இளஞாயிற்றின் கதிர் போலும் அழகமைந்த பொன்னாடையினையும், நீல மலையின் மேல் தோன்றும் இளஞாயிற்றினை ஒத்த முடி யினையும் அம்மலையினின்றிழியும் அருவியின்