பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

189


பாட்டுடன் யாழிசையினையும் கேட்டுப் பள்ளி கொள்ளும் தோற்றம் “அரும்பொருள் மரபின் மால் யாழ்கேளாக் கிடந்தான்போல் பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டிமிர் நறுங்கானல்’ என ஒலியவிந்தடங்கிய கடலுக்கு உவமையாகக் கூறப்பட்டது.

கண்ணனாகிய திருமால், தன்னை அகப்படுத்தற் பொருட்டுப் பகைவரால் அனுப்பப் பெற்ற மல்லர்களின் வீரத்தைக் கெடுத்து, அழித்துத் தன் நண்பர் குழாத்தில் கலந்து மகிழ்ந்த செய்தி,

“நீள் மருப்பு எழில் யானை

மல்லரை மறஞ்சாய்த்த மால்போல் தன்கிளை நாப்பண்

2 - - - - - 35 கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் . . . .” (கலி. 52)

என்ற தொடரிலும்,

"மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டார்” (கலி. 134)

என்ற தொடரிலும் குறிக்கப்பட்டுள்ளது.

பண்டைக் காலத்தில் இளங்குழந்தை கட்குப் பாதுகாப்பாகத் திருமாலுடைய வாட்படையினையும், சிவபெருமானுடைய மழுப்படையினையும் பொன்னாற் செய்து காப்பாகக் கட்டுதல் மரபு. இச்செய்தி,

“பொலஞ்செய்மழுவொடு வாளணி கொண்ட

நலங்கிளர் ஒண்பூண்” (கலி. 86)

எனவருந் தொடராற் புலனாகும். “பொன்னாற் செய்த மழுவோடே வாளும் அனிதலைக் கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூண்” என்பது இத்தொடரின் பொருள். இவ்வாறு பண்டை நாளில் குழந்தைகளுக்கு நோய் முதலியன வாராது காக்கும் அணிகளாக அறிவிக்கப் பட்டவை, வெட்டாத வாளும் எறியாத மழுவும் இரு புறத்தினும் நெருங்கக் கட்டிப் பவளத்தாற் செய்த இடபத்தினையுடையதாய் விளங்குகின்ற பூண்களாகும்.

இச்செய்தி,