பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஞாயிறு, திங்கள், வேள்வி முதல்வனாகிய ஆன்மா என எண்பேருருவினனாக (அட்டமூர்த்தியாக) விளங்குகின்றான் என்பது சைவ சமயக் கோட்பாடாகும்.

"தீவளி விசும்புநிலன்நீர் ஐந்து

ஞயிறுந் திங்களு மறனும்” (பரி. 3 வரி. 4, 5)

என வரும் பரிபாடல்டிகளில் இக்கொள்கை இடம் பெற்றிருத்தல் காணலாம். “மாயோயே! மாயோயே!! மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி, மணிதிகழ் உருவின் மாயோயே!” என அம்முதல்வனது சேவடி பெறுதற்குப் பலகாலும் எதிர்முகமாக்கிப் போற்றுகின்ற கடுவன் இளவெயினனார், அவன்கண் தோன்றிய பொருள்களைக் கூறத் தொடங்கி முதற்கண் ஈசற்கு (சிவனுக்கு) வடிவாகிய அட்டமூர்த்தங்கள் கூறுகின்றார். அவை தீ வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்களைந்தும் ஞாயிறும், திங்களும், வேள்வி முதல்வனும் என இவை வேட்கின்ற வடிவு தருமம் ஆதலின் அஃது அறன் எனப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் சைவ சமயக் கோட்பாட்டினை உளம் கொண்டு கூறப்பட்டதாகும்.

அனாதியாய் வருகின்ற மரபினை உடைய வேதமுதல்வனாகிய திருமால் விரிந்து அகன்ற ஆகமங்கள் எல்லாவற்றாலும், அகங்காரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும், மற்றும் எல்லாவற்றாலும் வனப்பும் எல்லையும் அறியப்படாதவன் என்பது,

ேே

முன்னை மரபின் முதுமொழி முதல்வ நினக்குவிரிந்தகன்ற கேள்வி அனைத்தினும் வலியினு மனத்தினு முணர்வினு மெல்லாம் வனப்புவரம் பறியா மரபி னோயே!”

(பரி. 3 : 47-50)

என வரும் பரிபாடலடிகளால் புலப்படுத்தப்பட்டது. வலியினும், மனத்தினும், உணர்வினும் என எண்ணப் பட்டவை முறையே அகங்காரம், மனம், புத்தி என்னும் அந்தக்கரணங்கள் மூன்றும் ஆகும். இப்பொருளை யான்