பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மேற்குறித்த பரிபாடற் பகுதியில் மூலம் என்றது “மூலப்பகுதியை. மூலப்பகுதியாவது, சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையது; ஆதலால், அது (மூலப்பகுதி) கூறவே, அறிவு அறியாமைகள் இன்பதுன்பங்கள் என்னும் உயிர்க் குணங்களும் அடங்கின. அறமாகிய சிறப்புடைக்குணம் கூறவே சிறப்பில் குணமாகிய பாவமும் அடங்கின்று. இதனால் ஈண்டு எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிர் என்பது உணர்த்தப் பட்டது” என இப்பகுதிக்குப் பரிமேலழகர் தரும் தத்துவ விளக்கம் சிந்தனைக்குரியதாகும். சாங்கியநூலார், முக் குணங்கள் மிக்கும் குறைந்தும் நில்லாது தம்முட் சமமாய் நின்றநிலையே மூலப்பகுதியென்றும், அதுவே காரியங்கள் எல்லாவற்றிற்கும்.முதற்காரணமாய் நிற்பதன்றி மூலப்பகுதி யாகிய அஃது ஒன்றன் காரியமாதல் இல்லையென்றும் கூறுவர். உணருந்தன்மையதாகிய உயிர் போகநுகர்ச்சிக்கு ஏதுவாகிய அவிச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் ஆகிய பஞ்சக்கிலேசமென்னும் பும்ஸ்த்துவ மலமுடையனாய்ப் புருடதத்துவம் எனப் பெயர் பெற்று நிற்றலின், ஈண்டு மூலப்பகுதி முதலாக எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிர் என்பது உணர்த்தப்பட்டது” என்றார் பரிமேலழகர். இங்கு மூலப்பகுதியொடு முதன்மையின் இகந்தகாலமும்’ எனத் தத்துவம் இருபத்தைந்தின் மேலாகக் காலம் என்னும் தத்துவம் எண்ணப்பெற்றுள்ளமை காணலாம். இதனால் தத்துவம் இருபத்தைந்து என்னும் சாங்கியர் கொள்கைக்கு வேறாகக் காலதத்துவம் உண்டெனக் கருதும் தத்துவக் கோட்பாடும் தமிழகத்தில் நிலவினமை உய்த்துணரப்படும். காலம் உலகம் உயிரே யுடம்பே' (தொல்-சொல்-கிளவி) எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்திற் காலம் என்பது ஒருண்மைப் பொருட் கூறாகக் குறிக்கப்பெற்றுள்ளமை முன்னர் விள்க்கப் பெற்றுள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும். தொழில் நிகழ்ச்சியினை இறப்பு நிகழ்வு எதிர்வு என வரையறுப்பதாகிய கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டு எவ்வகை மாற்றமுமின்றி என்றும் ஒரு பெற்றியதாய் விளங்குவது முழுமுதற் பொருளாகிய கடவுள் என்னும் உண்மையினை

“முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்

கடந்தவையமைந்த கழனிழலவை (பரி. 13; 46–47)