பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

215


நெடியோன், நேமியான், பாம்பனைப் பள்ளியமர்ந்தோன், புட்கொடி வெய்யோன், புள்மிசைக் கொடியோன், புள்ளனிநீள் கொடிச் செல்வன், பொன் புனை உடுக்கையோன், மாஅல், மால், மாயவண்னன், மாயவன், மாயோன், மீயோன், முந்நீர்வண்ணன், வள்ளுருள் நேமியான், வாய்மொழிப்புலவன், வேதமுதல்வன் என்ற தொடர்கள் காணப்படுகின்றன.

கருமை நிறமும், நீலமணிபோலும் ஒளியும்வாய்ந்த திருமேனியை உடையவர் திருமால் என்பதும், சக்கரப் படையினையும், சங்கினையும் திருக்கைகளில் ஏந்தியவர் என்பதும், பொன்னாடை உடுத்தவர் என்பதும், துழாய் மாலை அணிந்தவர் என்பதும், திருமகள் அமர்ந்த மார்பினை உடையவர் என்பதும், துளபமாலை அணிந்தவர் என்பதும், பாம்புக்குப் பகையாகிய கருடனை ஊர்தியாகவும் கொடியாகவும் உடையவர் என்பதும், பாற்கடலில் பாம்பனையிற் பள்ளி கொண்டுள்ளார் என்பதும் புலனாகும்.

படைத்தற் கடவுளாகிய நான்முகனைத் தன் உந்திக் கமலத்திலிருந்து தோற்றுவித்ததும், குறள் வடிவு கொண்டு மாவலிடால் மூவடி மண்வேண்டி நெடியோனாய் மூவுலகும் ஈரடியால் அளந்ததும், அவுனர்களை அழித்ததும், கேசி (கூந்தல்) என்னும் குதிரை வடிவாகிய அவுனனைக் கொன்றதும், பாம்பால் விழுங்கப்பட்ட திங்களை விடுவித்ததும், அவுணர் ஏறிவந்த களிற்றின் நுதலில் ஆழியை அழுத்தி அதனை ஒடச் செய்ததும், அவுனர்களால் மறைக்கப்பட்ட ஞாயிற்றை மீண்டும் விசும்பில் நிலைநிறுத்தி மன்னுயிர்களின் துன்பம் துடைத்ததும் திருமால் பன்றி உருக்கொண்டு தோன்றி நிலமகளைத் தனது கோட்டில் ஏந்திக் காத்ததும், பிரகலாதன் பொருட்டுத் தூணில் நரசிங்க வடிவாய்த் தோன்றியதும் இராமனாக அவதரித்துத் தன் தேவியைக் கவர்ந்த இராவணனைக் கொன்றழித்தற் பொருட்டுத் தனுக்கோடியில் ஒராலமரத்தின் நிழலில் தன் நண்பர்களுடன் அமர்ந்து ஆழ்ந்து சிந்தித்ததும் கண்ணனாக அவதரித்த நிலையில் கண்ணனும் அவனுடைய தமையனாகிய பலதேவனும் என இரு பெருந் தெய்வமாகப்