பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

219


- - - - 。 労う - “தொடங்கற்கண் தோன்றிய முதியவன்” (பாலைக்கலி1)

எனவும், -

“ஆதியந்தணன்” (பரிபாடல் 5)

எனவும் சங்கச் செய்யுட்கள் கூறும். இவன் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றினமையால், இத்தெய்வத்தைத் திருமாலின் மைந்தனாகப் போற்றுதல் மரபு. நான்முகனின் தந்தை திருமால் என்னும் இம்மரபு,

“வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப்

பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ யென மொழியுமால் அந்தணர் அருமறை”

(பரி. 3 :12 - 14)

எனவரும் பரிபாடற் பகுதியால் புலனாதல் காணலாம்.

தாமரைப் பூவினிற் பிறந்தமையால் மலர் மிசை முதல்வன்’ எனவும், ‘பூவன்’ எனவும் பரிபாடல் கூறும். ‘புலமும் பூவனும் நாற்றமும் நீ எனவரும் பரிபாடற் றொடரில் பூவினிற் றோன்றிய நான்முகன் பூவன் என்ற பெயரால் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க. நான்முகன் என்பது நான்கு முகங்கள் உடையனாதல் பற்றிய காரணப் பெயர்.

அசுரரைத் தடிந்து அமரரைக் காத்த முருகப் பெருமான் படைத்தற் கடவுளாகிய நான்முகனை வெகுண்டு தண்டித்தானாக, அந்நிலையில் அம் முதல் வனது வெகுளியைத் தணித்து நான்முகனை மீண்டும் படைப்புத் தொழிற்கு உரியனாக்குதல் வேண்டிக் கருடக் கொடியோ னாகிய திருமாலும், உமையொருபாகனாகிய இறைவனும், தேவர் முப்பத்துமூவரும், பதினெண்கணங்களும் முருகப் பெருமானைக் காண வான் வழியே வந்தனர் என்ற செய்தி திருமுருகாற்றுப்படையில் (திருவாவினன்குடி பற்றிய பகுதியில்) விரித்துரைக்கப்பெற்றது. முருகப்பெருமான் நான்முகனை வெகுண்டமை பற்றிய செய்தி புரானங்களில் வேறு வேறாகக் கூறப் பெற்றுள்ளது. திருக்கயிலாய மலையில்