பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என வரும் பரிபாடலடியினல் அறியப்படும்.மாலின் மைந்தராகிய இவ்விருவருள் கருவேளாகிய காமனுக்குச் சங்க காலத்தில் தனிக் கோயில் அமைந்திருந்தது என்பதும், மணமாகாத இளமகளிர் அக்கோயிலை அடைந்து பால் மடைகொடுத்துக் காமனை வழிபடுவர் என்பதும்,

ćć - - - - t

படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம்புகின்”

(முல்லைக்கலி 9)

எனவரும் கலித்தொகைத் தொடரால் அறியப்படும். "இவள் தெய்வத்திற்குப் பலியாகச் சமைக்கும் பாலோடே காமன் கோயிலிலே செல்லின், அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் போகடுவன்’ (கீழே எறிவான்). காமன் மாயோன் மகனாதலின் அவனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் அவ்வகை பிறவும்’ (தொல், அகம் : 48) என்றவழி வகை’ என்பதனாற் கொள்ளப்பட்டது” என மேற்காட்டிய தொடர்க்கு நச்சினார்க்கினியர் உரையும் விளக்கமும் தருவர். முல்லை நிலத்திற்குத் தெய்வமாக மாயோன் கூறப்பட்டதனை அடுத்து அவன் மகனாகிய காமன் முல்லை நிலத்தின் தெய்வ வகையாகக் கருதி வழிபடப் பெற்றனன் என்பது நச்சினார்க்கினியர் உரை விளக்கத்தால் உய்த்துணரப்படும். இளவேனிற் காலத்திலே காமவேளுக்குத் தமிழகத்தில் விழா எடுக்கப் பெற்றது என்ற செய்தி,

“காமவேள் விழவாயின்’ (கலி. 22)

எனவும்,

“உயர்ந்தவன் விழவினுள்” (கலி. 30)

எனவும்,

“வில்லவன் விழவினுள்” (கலி. 35)

எனவும் வரும் கலித்தொகைத் தொடரால் இனிது புலனாகும். காமவேள் மகர மீன் எழுதிய கொடியை உடையவன் என்பது,