பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

231


பெண்டிர் எனப்பட்டனர். களவொழுக்கத்தில்

“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்

ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்’ (தொல். கள. 25)

செவிலிக்குக் கூற்றாக நிகழும் என்றார் தொல்காப்பியனார். "தலைவியின் மெலிவிற்குரிய காரணங்களைக் கட்டு வைப்பித்தும், கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது மெலிவு தீர வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல் வேண்டும் என இருவரும் பொருந்திய பக்கத்துச் செய்திக்கண்ணும், அவ்வாறு வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்கிய காலத்துத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும் செவிலிக்குரிய கூற்று நிகழும்” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இக்கூற்றுக்கள் செவிலி தானே கூறும் தன்கூற்றாகவும், தலைவியும் தோழியும் செவிலி கூற்றாகக் கொண்டெடுத்து மொழியப்படுவனவாகவும் சங்கச் செய்யுட்களில் இடம் பெற்றுள்ளன.

"அணங்குடை நெடுவரை” (அகம். 22)

என்னும் அகப்பாட்டினுள் கட்டுப்பார்த்து வெறிஎடுத்தமை கூறப்பட்டுள்ளது.

"பணிவரை நிமிர்ந்த” (அகம். 98)

என்னும் அகப்பாட்டினுள் ‘பிரப்புளர்பு இரீஇ எனக்

கட்டுவிச்சியைக் கேட்டவாறும், ‘என்மகட்கு’ எனச் செவிலி

கூற்று நிகழ்ந்தவாறும் காணலாம். கடவுட் கற்சுனை (நற்.

34) எனத் தொடங்கும் நற்றினைப்பாட்டில்,

“நின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து

கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோர் கடவுளாயினும் ஆக

மடவை மன்ற வாழிய முருகே"

எனத் தோழி வெறியட்டிடத்து வேலன்மேல் ஆவேசித்துத்