பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

237


கட்டுவைப்பித்தும், கழங்குபார்த்தும், தெரிந்து கொண்டு அந்நோய்க்குக் காரணம் முருகன் என்று அறிந்த பின்னரே அம்முதல்வனைப் போற்றி வெறியாடத் தொடங்குவான் என்பது,

§§ - -

S S S C C C S S S S S S S S S S S S C C C C S S S C C C C C S S S S S S S C C S S S S S S S S S C முதுவாய்ட்

பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பிரீஇ

முருகன் ஆரணங் கென்றலின்

செல்வன் பெரும்பெயர் ஏற்றி வேலன்

வெறியர் வியன்கணம்” (அகம். 98) “வேலன் கழங்கினால் அறிகுவதென்றான்” (ஐங் 248) “பொய்யா மரபின் ஊர்முது வேலன்

கழங்கு மெய்ப்படுத்திக் கன்னந்துக்கி

முருகென மொழியுமாயின்”

எனவருந் தொடர்களாற் புலனாகும்.

முருகப் பெருமானை வழிபட்டு வெறியாடுமிடம் பலநிற மலர்களால் அணி செய்யப் பெற்றிருக்கும். முருகனுக் குரிய வாத்தியமாகிய தொண்டகப் பறை முதலியன முழங்க தெய்வ உருவினைத் தாங்கி வேலன் வேலேந்தி ஆடுவான். இங்ங்னம் நிகழ்த்தப்பெறும் வெறியாடல் நள்ளிரவில் நிகழ்த்தப்பெறும் என்பதும், இவ்வாடலில் ஆட்டுக் குட்டியாகிய மறியினை யறுத்துக் குருதிப்பலியும் செந்தினை யும் படைத்து வழிபடுதல் இயல்பு என்பதும் முருகனைக் குறித்து நிகழும் இவ்வெறியாடல் முருகெனவும் வழங்கும் என்பதும்,

"படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை

நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்”(அகம். 22:5-11)