பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பொதியிலில் நிகழும் சிவலிங்க வழிபாட்டில் எவ்வுயிர்க்கும் உயிர்க்குயிராய் உள்நின்று அருள் சுரக்கும் பேரருளாளனும் அறவுருவினனும் ஆகிய இறைவனுக்கு ஒவ்வாத ஊனையும் கள்ளையும் விலக்கி எல்லாவுயிர்களிடத்தும் அன்புடையராய் அன்பே வடிவாகிய இறைவனை நினைவு கூர்ந்து போற்றும் நிலையில் அம்முதல்வனை நெல்லும் மலரும் தூவிப் போற்றும் தூய வழிபாட்டினை மேற்கொண்டொழுகுதல் தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலைபெற்று வரும் கடவுள் வழிபாட்டு நெறிமுறையாகும். தெய்வநிலை பெற்ற வீரர்க்கு ஊனும் கள்ளும் படைத்துப் போற்றும் நடுகல் வழிபாடும், உயிர்ப்பலியின்றி நறுமலர் தூவிப் போற்றும் கடவுள் வழிபாடும் ஆகிய இவ்விருதிற வழிபாடுகளும் நாட்டுப்புறங்களிலும் நகர் நடுவிலும் சங்ககாலத்திற் சிறப்பிடம் பெற்றிருந்தன என்பதும், மறக்குடியில் தோன்றிய மக்கள் தமக்குச் சிறப்புரிமையுடைய தெய்வ வழிபாடாக நடுகல் வழிபாட்டினை மேற்கொண்டனர் என்பதும்,

ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி,

ஒளிறேந்து மருப்பிற்களிறெறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவினல்லது

நெல்லுகுத்துப் பரவுங் கடவுளும் இலமே”

என மறக்குடியினர் தாம் அணியும் பூவும், உண்ணும் உணவும், தமக்குப் பணி செய்யும் குடியும், வனங்குந் தெய்வமும் பற்றிக் கூறுமுறையிலமைந்த புறநானூற்றுப் பாட்டலால் இனிது புலனாகும். எனவே சங்க காலத்தில் மறமும் அறமும் பற்றிய மக்களது குடிநிலை வாழ்க்கைக்கு ஏற்ப வழிபடும் சிறு தெய்வ வழிபாடும் நெல்லும் மலரும் தூவி வழிபடும் பெருந்தெய்வ வழிபாடும் தமிழகத்தில் ஒப்ப நிகழ்ந்தன எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

இருளிலும் குளிரிலும் கடுவெயிலிலும் அகப்பட்டு அல்லலுற்ற பண்டைக்கால மக்கள் இருள் நீங்க ஒளிவழங்கும் செஞ்ஞாயிற்றினையும் குளிர்நீக்கி வெம்மைதரும் தீயினையும்

20. புறநானூறு 335.