பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்பது தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணமாகும். ஆடுதல் தொழிலில் வல்ல கூத்தரும், பண் பொருந்தப் பாடுதலில் வல்ல பானரும், பிறர் மனத்திற் கொண்டதனைக் குறிப்பால் உணர்ந்து இசை பட நடித்துக் காட்ட வல்ல பொருநரும், தன் மனக் குறிப்பு மெய்யின்கண் புலப்பட ஆடவல்ல விறலியரும் ஆகிய நால்வகையோரும் தாம் பெற்றுள்ள செல்வப் பொலிவும் தம்மை வழி இடையே எதிர்ப்பட்ட பரிசிலர்களின் வறுமைத் தோற்றமும் ஒன்றிரண்டு மாறுபட்டுத் தோன்ற, தமக்குப் பெருஞ் செல்வத்தை வழங்கியவர் இன்னார் எனவும் அவரை அடைந்து பரிசில் பெறுதற்குரிய வழிமுறைகள் இவையெனவும் தம்மை எதிர்ப்பட்ட பரிசிலர் க்கு அறிவுறுத்தி, அன்னோர் தாம் கூறியவழியே சென்று பரிசில் பெறுதற்கு ஏற்ற வழி சொல்லி அனுப்புவதாக அமைந்த பனுவல் ஆற்றுப்படை என்னும் துறையாம் என்பது மேற்குறித்த தொல்காப்பியத் தொடரின் பொருளாகும். இத் தொடரிற் சுட்டிய இலக்கணத்தின்படி அமைந்தன கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, விறலியாற்றுப்படை என்பன. இவற்றுக்குரிய இலக்கியங்களாகப் பத்துப் பாட்டுள் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் விறலியாற்றுப்படை என்னும் துறைகளிலமைந்த பாடல்களையும் கொள்ளலாம். வாழ்க்கைத்துறையில் வளம் பெற்றோர் தம்போல் வளம் பெறாதாரை நோக்கி வளம் பெற்று வாழ்வதற்கேற்ற வழி முறைகளை அறிவுறுத்துவது ஆற்றுப்படைப் பனுவல்களின் நோக்கமாகும். "யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எண்ணி விரிந்த உள்ளத்துடன் ஒருவாக்கொருவா தத்தம் அனுபவங்களை எடுத்துரைத்து வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டி உதவும் இத்தைைகய தெய்வ அருட் குறிப்பினை,

“ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇ சென்று பயனெதிரச் சொன்னபக்கமும்”