பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

253


முறையில் நக்கீரர் பாடிய இவ்வாற்றுப்படையும், ஆற்றுப்படுத்துவோராகிய புலவர் பெயரால் புலவராற்றுப் படை என வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மேற்குறித்த இளம்பூரணர் உரையால் உய்த்துணரப்படும்.

எனினும், நக்கீரரால் பாடப்பெற்ற இவ்வாற்றுப்படை ஆற்றுப்படுத்தும் புலவர் பெயரால் புலவராற்றுப்படை என வழங்கப்பெறாமல் ஆற்றுப்படுத்தப் பெறும் முருகப் பெருமான் பெயரால் முருகாற்றுப்படை எனவே சிறப்பு முறையில் வழங்கப் பெற்று வருகிறது. புலவராற்றுப்படை என்ற பெயரால் இப்பாடல் நுதலிய சமய நுண்பொருள் விளங்கமாட்டாது போகவே அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி முருகாற்றுப்படை என இப்பனுவல் சிறப்பு முறையில் வழங்கப் பெறுவதாயிற்று. எனவே புலவராற்றுப்படை என்ற பொதுப் பெயர் வழக்கு வீழ்ந்ததாதல் வேண்டும். “இதனைப் புலவராற்றுப்படை என உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க” (தொல். புறம். 36) எனவரும் நச்சினார்க்கினியர் கூற்று இவ்வுண்மையைப் புலப்படுத்தல்

RFI GHE. GR)fTH £).

மெய்யுணர்வினால் உயிர்முனைப்படங்கி இறைவனது திருவடிகளை இடையறாது போற்றும் நலம்புரி கொள்கைப் புலவன் ஒருவன் தன்னை ஒத்த புலவர்களை இறைவன்பால் ஆற்றுப்படுத்தற்குரிய தகுதி உடையேன் யான் என்னும் ஆன்ம போதத்துடன் முருகப் பெருமானை அடைதற்குரிய நெறி முறையைப் புலவர்க்கு அறிவுறுத்தினான் என்றல் சீவன் முத்தனாகிய அவனது உளவியல்பிற்குக் சிறிதும் ஒவ்வாது. எனவே, இவ்வாற்றுப்படை அப்புலவனது தலைமை தோன்ற புலவராற்றுப்படை என்ற பெயரால் வழங்கப் பெறாதாயிற்று. அன்றியும் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமானை அடையும் நெறியறிந்து சென்று சேர்தல் சில் வாழ் நாள் பல்பினிச் சிற்றறிவினராகிய மன்னுயிர்கட்கு இயலா தென்பதும் அரும் பெயர் மரபில் பெரும் பெயர் முருகனாகிய அம்முதல்வனே தன் அருள்