பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


հհ

கொத்துக்களையுடையதென்பது ‘கவிழினர் மாமுதல் தடிந்த” என்ற தொடரால் அறியப்படும் என்றது "அவுனர் எல்லாரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரம் கொண்டிருந்து சாதித்ததொரு மாவை வெட்டினான் என்றவாறு’ எனவரும் நச்சினார்க் கினியர் உரைத்தொடர் இங்கு நோக்கத்தகுந்தது. இறைவனடி சேர்தலொன்றையே சிறந்த வீடு பேறாகப் பண்டைத் தமிழ் மக்கள் கருதி வந்துள்ளார்களென்பது திருக்குறள் கடவுள் வாழ்த்தில் இறைவனடி சேர்தல், தாள் சேர்தல் எனக் குறிக்கப்படும் சொல் வழக்குகளால் நன்கு தெளியப்படும். இங்ங்னம் இறைவனடி சேர்தலே வீடு பேறாகும் எனச் சைவத்திருமுறை ஆசிரியர்கள் தாம் பெற்ற திருவருள் அனுபவத்தால் உணர்ந்து கூறிய அடிசேர் முத்தியினையே

“சேவடிபடருஞ் செம்மலுள்ள மொடு

நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு”

என வருந் தொடரில் நக்கீரனார் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘புலம்பிரிந்துறையும் அடி’

எனவும்,

“சேவடிபடரும் செம்மலுள்ளமொடு

செலவு நீ நயந்தனையாயின்”

எனவும் இயைத்துப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். புலம்பிரிந்து உறைதலாவது, ஐம்புல உணர்வினை நீங்கி, சிவஞானவுணர்வாகிய செம்புல உணர்வுடையராதல். திருவாதவூர் மகிழ் செழுமறைமுனிவர் ஐம்புலன் கையிகந்து அறிவாய் அறியாச் செம்புலச் செல்வராயினர்’ எனத் திருச்சிற்றம்பலக் கோவையார் உரை முகத்தே பேராசிரியர் தரும் விளக்கம்,

“சேவடிபடரும் செம்மலுள்ளமொடு