பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

பொலிவினையும் விரித்துரைக்கும் நிலையிலமைந்தது,

என வரும்

“சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வானரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானி னுரிவை தைஇய ஊன்கெடு மார்பி னென்பெழுந்தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும் கற்றோரறியா வறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவது மறிய வியல்பினர் மேவரத் துணியில் காட்சி முனிவர்”

திருமுருகாற்றுப்படைத் தொடராகும்.

திருவாவினன்குடித் திருக்கோயிலில் முருகனது பொருள்சேர் புகழ்ப் பாடல்களை இசையுடன் பாடும் மகளிரும் யாழில் இசைப்போரும் ஆகிய இசைவாணர்கள் அழுக்கேறாத தூய

உடையும்

நோயின்றித் தூய்மை வாய்ந்த உடல் வனப்பும்

மாசற்ற தூய நன்னெஞ்சமும் உடையராய் விளங்கிய

திறத்தை,

"புகைமுகந் தன்ன மாசில் துவுடை

முகைவாயவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் பருமந்தாங்கிய பணிந்தேந்தல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க”

எனவரும் தொடரில் நக்கீரர் விரித்துக் கூறியுள்ளமை காணலாம். பலரும் புகழும் அயன் அரி அரன் என்னும்