பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

277


போலும் மகளிர் குரவையாடி அசைய, தன்னுடைய முழவினை ஒத்த பெருமைவாய்ந்த கையினாலே அம்மகளிர் கையினைத் தழுவி எடுத்துக்கொண்டு, அவர்கட்கு முதற்கை கொடுத்து மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் முருகப் பெருமானாகிய அம் முதல்வனுக்கு நிலைபெற்ற குணம் என்பது முருகாற்றுப்படையில் குன்று தோறாடல் பகுதியால் விரித்துரைக்கப் பெற்றது.

இப்பகுதியில் முருகபூசை செய்யும் படிமத்தானாகிய வேலன் முன்னின்று நடத்தும் வழிபாட்டில் குறிஞ்சிக் கடவுளாகிய முருகப்பெருமான் சேவற் கொடியை ஏந்தி மயில் மீதமர்ந்து தன் தெய்வத் தோற்றத்தினைப் புலப்படுத்தித் தன்னைச் சேவிக்கும் மகளிர்க்கும் பாடும் மகளிர்க்கும் முதற்கை கொடுத்து எளிவந்து அருளும் திறம் குறிக்கப் பெற்றுள்ளமை கூர்ந்துனரத் தக்கதாகும். இதனால் சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமான் தன்னை ஆரா அன்பினால் வழிபட்டுப் போற்றும் அன்பர்களது காட்சிக்கு எளியனாய் எழுந்தருளும் பேரருளாளன் என்பது புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இங்ங்னம் மக்களால் வழிபடப் பெறும் தெய்வம் அவர்தம் கண்ணிற்குப் புலனாகத் தோன்றி அருளும் என்னும் மெய்ம்மை,

"வழிபடு தெய்வம் கட்கண்டாங்கு”

எனவரும் சங்க இலக்கியத் தொடரால் நன்கு துனியப் பெறும்.

“சிந்தனைக்கும் அரியாய் என்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை யாண்டருள்புரியும்

எம்பெருமான்”

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

சிறிய தினையரிசியை மலரொடு கலந்து பிரப்பரிசியாக வைத்து, ஆட்டுக்குட்டியைப் பலியிட்டு