பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பேற்றின்பத்தினை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல்வல்ல இறைவனே! பிறவித் துன்பங்களால் இடுக்கண்பட்டு வந்தோர்க்கு அருள் செய்யும் சேயோனே! மிக்குச் செல்கின்ற போர்களில் கொடியோர்களை வென்றடுகின்ற நினதழகிய மார்பிடத்தே பொன்னாற் செய்த பேரணிகலங்களை அணிந்தவனே இரந்து வந்தோரை வேண்டுவன.கொடுத்துப் பாதுகாத்தலால் அவர்க்குப் பகையாயினார் அஞ்சத்தக்க நெடிய வேளே! தேவரும் முனிவரும் ஆகிய பெரியோர்கள் ஏத்தும் பெரும்பெயரை உடைய முருகனே! சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின மிகுகின்ற வன்மையுடைய மதவலி என்னும் பெயரையுடையவனே! மிக்க போர்த் தொழிலிலே வல்ல வீரர்க்கு உவமையாக உவமிக்கப்படுபவனே! தலைவனே! என்று யான் அறிந்து நினக்கு எடுத்துரைத்த அளவில் அமையாமல் நீ நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து இறைவனாகிய நின் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் எம்மை ஒத்த பல்லுயிருக்கும் அரியதாகையி னாலே நின் திருவடியைப் பெறவேண்டுமென்று நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பார் இல்லாத மெய்ஞ்ஞானத்தை யுடையவனே என்று சொல்லி நீ கருதிய வீடு பேற்றினை அம்முதல்வனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்னே வேறுவேறாகிய பலவடிவினையுடையராய் அவ்விறைவனை வணங்கிநிற்கும் அடியார்கள் விழாவெடுத்த களத்திலே தாங்கள் பொலிவுபெறத் தோன்றி அம்முதல்வனை நோக்கி “பெருமானே! அறிவு முதிர்ந்த வாய்மையினையுடைய புலவனாகிய இவன் நினது வளமார்ந்த புகழினைக் கூறவிரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக உள்ள மிக்க பெரும்புகழ் பலவற்றை எடுத்துக் கூறிப் போற்றி வந்துள்ளான். இவன் நின்னால் அளிக்கத் தக்கான்” எனக் கூறிய அளவிலே பழமுதிர் சோலைமலைக்கு உரியோனாகிய அம் முருகன் தெய்வத்தன்மை வாய்ந்த ஆற்றல் விளங்கும் வடிவினையும், வானைத் தீண்டும் வளர்ச்சியையும் உடையனாய் அவ்விடத்தே வந்தணுகிக் கண்டோர்க்கு அச்சத்தை மிகுவிக்கும் தன் தெய்வத் தோற்றத்தை உள்ளடக்கிக் கொண்டு மனம் நாறுகின்ற தெய்வத்தன்மையுடைய தொன்மைவாய்ந்த தனது இளைய திருமேனியைக் காட் டி, நின்னை நோக்கி “நீ வீடுபெற வந்த