பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

293


பெற்றுள்ளமையும் எழுபது பரிபாடல்களுள் இருபத்திரன்கடு பாடல்களும், சில தொடர்களுமே கிடைத்துள்ளன என்பதும் முன்னர்க் குறிக்கப் பெற்றன. எழுபது பரிபாடல்களுள் முருகப் பெருமானைப் போற்றிய பாடல்கள் முப்பத்தொன்றாகும். அவற்றுள் 5,8,9,14,17:18,1921 என்னும் எட்டுப்பாடல்கள்ே இப்பொழுது கிடைத்துள்ளன. ஐந்தாம் பரிபாடலின்கண் குறிக்கப்பெற்ற முருகப் பெருமானது பிறப்புப்பற்றிய புராணச் செய்தி முன்னர் விளக்கப் பெற்றது.

“பரந்த கரிய குளிர்ச்சியையுடைய கடலிடத்தே பாதைகள் பிதிர்ந்து துகள் படும்படி மிகவுயர்ந்த பிணிமுக மென்னும் யானையின் மீதிவர்ந்து உட்புகுந்து தீயின் கொழுந்து ஒலிப்ப வேலினைத் திரித்து விட்டெறிந்து அச்சத்தால் நடுங்குகின்ற சூர்மாவினது முதலைத் தடிந்து வென்றியுடைமையால் நல்வினையாளர் என ஒரு கூற்றாற் பெயர் பெற்ற தீவினையினையும் கொல்லப்படும் தகைமை யினையும் உடைய வஞ்சனைத் தொழிலில் வல்ல அவுனரைக் கிளையறக் கொன்ற வேற் படையினாலே நாவலந் தீவினுள் வடபகுதியிலுள்ள அன்றில் என்னும் குருகின் பெயரையுடைய கிரவுஞ்ச மலையினைத் துளைத்து அம்மலையினைப் பலரும் செல்லுதற்குரிய வழியாக்கிய ஆறு மென் தலையினை உடையோனே! ஆறு திருமுகங் களுடனும், பன்னிரண்டு திருத்தோள்களுடனும் ஞாயிற்றின் எழுச்சிபோலும் திருமேனி நிற அழகுடனும், தாமரைப் பூவின்கண் பிறந்த பிறப்பினை உடையோனே! உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகனே! செவ்வேளே! திருவருட் பண்புகளின் நிறைவினையுடையோனே! உலகுயிர்கட்குத் தலைவனே! என இவ்வாறு கண்டார்க்கு அச்சம் தரும் வெறியாட்டு விழவினுள் நின்னைக் கண்டு வழிபடும் வேலன் இவ்வாறு சொல்லி ஏத்தும் வெறிப்பாடல்களும் பல உள்ளன. இவ்வுலகிற் கெல்லாம் தலைவன் நீயே யாதலால் வெறியாடுகளத்திலே வேலன் நின்னைக் கண்டு ஏத்துகின்றி அப்பாடலில் கூறப்பட்டவை உண்மை நிகழ்ச்சியுமல்ல. ஆயினும் அப்பாடல்களால் நின்னைப் புகழும்போது அன்டர் முன்னே நீ வெளிப்படுதலால் அப்பாடலிற் கூறப்பட்டவை நிசழாதன என ஒதுக்கத் தக்கனவுமல்ல. அப்பாடல்கள்