பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மலரிடத்தே படிந்த வண்டுகள் வெருவி அம்மலர்களின் தாதினை ஊதப்பெறாவாயின. திருப்பரங்குன்றத்தின் அணிநலங்கள் அத்தன்மையனவாய் மலையிடத்தே ஒழுகும் வெள்ளிய அருவி நீங்காது பரவி உழவரது வயலின்கண் பரவிநிற்கும். மலைமேல் விளையாடும் மகளிர் இயங்குதலால் அவர்தம் அணிகலங்களிலிருந்து வீழ்ந்த நீலமணி வயலைச் சிதைக்கும்.

பிரிந்த தலைவர் வினைமுடித்து விரைவின் வந்து தம்மை அடைதற்பொருட்டு வெள்ளிய அருவியையுடைய பரங்குன்றின்கண் தலைவியர் செய்யும் தெய்வ விழாவும், அவ்வாறு அவர்கள் வந்து கூடிய நிலையில் வளங்கெழு வையையாற்றின்கண் அவரோடு புதுப் புனலாடுதலாகிய விருந்தயர்வம், வேற்படையையுடைய பாண்டியன து கூடல் நகரத்தின்கண் மனைக்கண் தங்கி அம்மகளிர் செய்யும் விருந்தோம்பலும் தம்மிற் காரணகாரியங்களாய் முன்னும் பின்னுமாக மாறி மாறி நிகழ்தல் மனைவாழ்க்கை நெறி யாதலின் அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று எனத் திருப்பரங் குன்றத்தில் மகளிரும் மைந்தரும் நிகழ்த்தும் தெய்வ வழிபாட்டினையும், அவ்வழிபாட்டின் பயனாக வையைப் புதுப்புனலாட்டும், மனைக்கண் விருந்தோம்புதலும் ஆக நிகழும் நற்பயன்களையும் விரித்துரைத்த நல்லழிசியார் முருகப்பெருமானை எதிர்முகமாக்கி வேண்டும் நிலையிலமைந்தது :

“மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்

பிணிமுக மூர்ந்த வெல்பேரிறைவ பணியொரீஇ நின்புகழேந்தி அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும் அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுகயா மெனவே” (uf. 17, 48-53)

எனவரும் பாடற்பகுதியாகும். நீலமணிபோலும் நிறத்தினை யுடைய மயிலையும், உயர்ந்த கோழிக் கொடியையும், பிணிமுகம் என்னும் உயர்ந்த யானையை ஊர்ந்து செய்யப் பட்ட வெல்லும் போரினையுமுடைய தலைவனே! சிற்றறிவும்