பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

315


சுற்றத்தாருடன் பிரியாது கலந்து கொண்டு முருகனது திருவடிக் கீழ் உறைதலே மக்கள் அடைதற்குரிய நிலைத்த பேரின்பமாம் என்பதனையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளமை மனங்கொளற் பாலதாகும்.

நப்பண்ணனார் பாடிய 19ஆம் பரிபாடல் செவ்வேளைப் பரவிப் போற்றிய கடவுள் வாழ்த்தாக வமைந்துள்ளது. . இன்பமே நுகரும் வானுலகின் கண் உரைதற்கேதுவாகிய விருப்பத்தை மண்ணுலக எல்லையிலும் கொண்டு தந்து உயிர்களின் அறிவிெல்லையால் அறியப் படாத புகழுக்குரிய கடம்பமரத்தினைப் பொருந்தியிருந்து பெறுதற்கரிய இறைமைத் தன்மையால் அமர்ந்த பெரியோர்கள் நுகரும் வீடு பேற்றின்பத்தினை மண்ணுலகில் வாழும் மக்களும் எய்துக என மன்னுயிர்கட்கு எளிவந்தருள் புரியும் அருள் நோக்குடன் முருகப் பெருமான் திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளிய அருமையில் எளிய அழகின் திறத்தினை முன்னிலைப்படுத்துப் போற்றும் முறையில் அமைந்தது,

“நிலவரையழுவத்தான் வானுறை புகல்தந்து புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து அடுமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன் இருநிலந்தோரும் இயைகென, ஈத்தநின் தண்பரங்குன்றத்தியலணி’ (பரி. 19:1-5)

என வரும் பரிபாடற் பகுதியாகும். தேவரும் அறியா முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமான் இருநிலத்தோர் யாவரும் தன்னை அன்பினால் வணங்கிப் பேரின்பம் நுகர் தற்பொருட்டு மண்ணுலகத்தில் திருப்பரங்குன்றம் முதலிய பதிகளிற் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது,

“புவுனியிற் போய்ப் பிறவாமையின் நாள்நாம்

போக்கு கின்றோம் அவமே யிந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்